தொழில் முனைவோர், இது ஆண்களின் ஆதிக்க களமா?

உலக அளவில், குறிப்பாக இந்தியாவில் தொழிலதிபா்கள் என்று சொன்னால் முதல் 10 இடங்களில் வந்து நிற்பது முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, லட்சுமி மிட்டல், ஷிவ் நாடார், ரத்தன் டாடா, கவ்தம் அதானி இன்னும் பல தரப்பட்ட ஆண்களே.

பெண் தொழில் முனைவோர் மிக சிலரே இருக்கின்றனர். மாஸ்டர்கார்டு என்ற நிறுவனம் சமீபத்தில் பெண் தொழில் முனைவோருக்கு வாய்ப்புகள் வழங்கும் பொருளாதாரங்கள் குறித்து ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டிருக்கிறது.

இந்த ஆய்வு மொத்தம் 57 நாடுகளில் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது, இந்த நாடுகளில்தான் 70.9 சதவிகிதப் பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். இதில் இந்தியாவுக்கு 52 வது இடம் கிடைத்துள்ளது.

இந்தியாவின் 6-வது பொருளாதார கருத்துகணிப்பின்படி வெறும் 14 சதவிகித இந்தியத் தொழில்கள் மட்டுமே பெண்களால் முன்னெடுத்துக் கொண்டு செல்லப்படும் என்று சொல்கிறது.

தொழில்முனைவை நோக்கிய பெண்களின் ஆா்வமில்லமைக்கு இந்தியாவின் கலாச்சாரமும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது என்று மாஸ்டர் கார்டால் சொல்லப்படுகிறது.

தொழில் முனைவு ஆா்வம் எத்தனை பெண்களுக்கு இருக்கிறது? அல்லது அதனைப் பற்றி அறிவும் எவ்வாறு வழங்கப்பட்டிருக்கிறது? என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் பெண்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு தேவையான ஆலோசனைகளோ, வழிகாட்டுதல்களோ, பயிற்சியோ, ஊக்கமோ அதிகளவில் இல்லை.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலைப் பார்க்கும்போது அதில் பெண்கள் தங்கள் குடும்ப சொத்தின் மூலம்தான் பெரும்பாலும் கோடீஸ்வரர்கள் ஆகியிருக்கிறார்களே தவிர, முதல் தலைமுறை கோடிஸ்வரா்கள் இதில் மிக மிக குறைவு என்பதை இதனோடு பொருத்திப் பார்க்கலாம்.

தொழில் முனைவு ஆண்களுக்கானது, என்ற மனநிலையிலிருந்து வெளிவர வேண்டிய கட்டயாம் ஏற்ப்பட்டிருக்கிறது.

மிகவும் கடினமான, குடும்பத்தின் பொருளாதார பொறுப்புகளை பெரும்பாலான பெண்கள் மிகவும் சிறப்பாக நிர்வகித்து வருகினறனா், அதேபோல், தொழில் நிறுவனங்களின் பொருளாதார திட்டமிடல்களை பெண்களால் செய்ய முடியாது என்று சொல்வது சரியாக இருக்காது.

இந்த நிலை மாற வேண்டும். பள்ளி கல்லூரிகள் வேலை தேடுவதற்கு பயிற்சி தருவதை விடுத்து தொழில் முனைவின் அடிப்படைகளை கற்பிக்கும் இடமாக மாற வேண்டும்.