யூகலிப்டஸ் ஆயிலை இப்படி பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்..!!

யூகலிப்டஸ் குளோபுலஸ் எனப்படும் மரத்தின் இலைகளை நீராவியில் காய்ச்சி யூகலிப்டஸ் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதனை நீலகிரி எண்ணெய் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

யூகலிப்டஸ் எண்ணெய் ஒரு சக்திவாய்ந்த ஆன்டி செப்டிக் மற்றும் வலி நிவாரணமாக செயல்படுகிறது. இதனை காயங்கள், தொற்றுகள் மற்றும் தசை வலிக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம்.

Also Read : மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..!

யூகலிப்டஸ் எண்ணெய் சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம் தருகிறது. சூடான நீரில் சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து ஆவி பிடிக்கலாம். இது சளியை குறைப்பதோடு, நுரையீரலில் உள்ள மூச்சுக் குழாய்களை விரிவுபடுத்தி வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

மூட்டு வலி, முழங்கால் வலி, தசை வலி போன்ற பிரச்சினைகளுக்கு யூகலிப்டஸ் எண்ணெய் பயன்படுத்தியவர்கள் விரைவில் நிவாரணம் பெற்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

யூகலிப்டஸ் எண்ணெய் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. அதன் வாசனை தலைவலியிலிருந்து விடுபட உதவுகிறது.

Also Read : மழை காலத்தில் சளி தொல்லை இருக்கா?…இதை ட்ரை பண்ணுங்க..!!

தலையில் உள்ள பொடுகுத் தொல்லையை சரி செய்ய யூகலிப்டஸ் எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும். தேங்காய் எண்ணெயுடன் சிறிது யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து உச்சந்தலையில் மசாஜ் செய்த பிறகு, தலைமுடியை அலச வேண்டும். இதனை தொடர்ந்து செய்யும் போது பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

யூகலிப்டஸ் எண்ணெய் அல்லது அதன் இலைச்சாற்றை மேற்பூச்சியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாய்வழியாக எப்போதும் எடுத்துக் கொள்ளக்கூடாது, ஏனெனில் அது உயிருக்கு ஆபத்தானது.

Recent Post