கண்களை அடிக்கடி தேய்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்

கண்களில் தூசு விழுந்தாலோ, அரிப்பு ஏற்பட்டாலோ கண்களை அழுத்தி தேய்ப்பவர்களும் உண்டு. உடலில் சோர்வு ஏற்படும்போதெல்லாம் சிலர் கண்களில் கைகளை வைத்து கசக்குவார்கள்.

கண்களில் தூசுகள் விழும்போது கண்களை கசக்கினால் தூசு வெளியே வந்துவிடும் என்று அழுத்தி தேய்க்கிறார்கள். இது மிகவும் தவறான செயல். இது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

கண்களை தொடர்ந்து தேய்ப்பதால் விழித்திரை பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் இவை சிதைந்து போகவும் செய்யும். விழித்திரை திசுக்களின் தன்மை மாறிவிடும். இறுதியில் விழித்திரை மாற்று சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் உருவாகும்.

விழித்திரையில் கீறலோ, சேதமோ ஏற்பட்டிருந்தால் அதனை கவனிக்க வேண்டும். சரியாக பரிசோதிக்கா விட்டால் புண்கள் ஏற்படும். சிலருக்கு கண்களில் திரவம் போல் உருவாகும். இது கண் அழுத்த நோய்க்கான அறிகுறி. அதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் பார்வை நரம்புகள் சேதமடையும்.

கைகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் கண்களுக்கு பரவிவிடும் என்பதால் கண்களை அடிக்கடி தொட கூடாது. கண்கள் ஆரோக்கியமாக இருக்க உள்ளங்கைகளை ஒன்றாக தேய்த்து வெப்பமூட்டி, பின் கண்களின் மீது வைக்க வேண்டும். இதனால் கண்கள் ரிலாக்ஸ் ஆகும்.

கண்களில் விழக்கூடிய தூசி போன்றவற்றை, தண்ணீர் மூலம் சுத்தம் செய்து சுலபமாக வெளியேற்றி விடலாம். அதன் பிறகும் கண்களில் எரிச்சல் அடங்கவில்லை என்றால், மருத்துவரை அணுகுவது நல்லது.

Recent Post