உங்கள் கண்களை பாதுகாக்க சில டிப்ஸ்

டிவி, கம்ப்யூட்டர், மொபைல் என நவீன வசதிகள் பெருக பெருக, கண் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கையும் பெருகிய படி உள்ளது. சிறு சிறு விஷயங்களில் நாம் கவனத்தோடு இருந்தால் உங்கள் கண்களை நிச்சயம் பாதுகாக்க முடியும்.

கண்களை தொட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், முதலில் கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு தொடவேண்டும்.

கண்களில் தூசி விழுந்து நீண்ட நேரமாகியும் அந்த தூசி போகவில்லை என்றால், எக்காரணத்தை கொண்டும் கண்களை கசக்கக் கூடாது.

மதிய நேரங்களில் குறிப்பாக கோடை காலத்தில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், கண்களுக்கு பாதுகாப்பு தரும் நல்ல தரமான கூலிங் கிளாசை வாங்கி அணிய வேண்டும். கண்களை அடிக்கடி குளிர்ந்த நீரால் கழுவுவது நல்லது.

உங்களுடைய கண்களில் எந்த வித குறைபாடும் இல்லையென்றாலும் வருடத்திற்கு ஒரு முறை டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஏனென்றால் சில கண் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டுபிடித்து தீர்க்க உதவும்.

கணினி அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு கண் தசைகள் விரைவாக தளர்வடைந்துவிடும். சிலருக்கு கண்களில் அலர்ஜி ஏற்படலாம். இந்தப் பிரச்சனை வராமல் தடுக்க கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். சில வினாடிகள் கண்களை மூடி விழித்திரைகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று நோக்கக் கூடாது.

கண்ணுக்கு அதிகம் வேலை கொடுக்கும் சமயங்களில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், இடையில், ஐந்து நிமிடம், உள்ளங்கையால், இரு கண்ணையும் மூடியபடி அமர்ந்து, கண்ணுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

இரு கைகளையும் நன்றாகத் தேய்த்துச் சூடுகிளப்பி, கண்களில் ஒற்றி எடுத்தால், கண் நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். ரத்த ஓட்டம் அதிகமாகும்.

கண் குளிர்ச்சிக்காக வெள்ளரிக்காயை நறுக்கி, காலை, மாலை இருவேளையும் கண்களில் வைக்கலாம்.

Recent Post

RELATED POST