வைட்டமின் A நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் உங்களுடைய சருமம் இயற்கையாகவே ஜொலிக்கும். வைட்டமின் A நிறைந்த உணவுகள் உங்கள் சருமத்தை மட்டுமல்ல, கண் பார்வையையும் மேம்படுத்தும்.
கேரட்
கேரட்டில் வைட்டமின் கே நிறைந்துள்ளதால் இவை கண்களுக்கும் சருமத்திற்கும் ஆரோக்கியம் அளிக்கிறது. கேரட்டை பச்சையாகவோ அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம். பச்சையாக சாப்பிடும்போது அதில் உள்ள சத்துக்கள் அப்படியே நமது உடலுக்கு கிடைக்கும்.
தக்காளி
தக்காளி சமையலுக்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் பல நன்மைகளை தருகிறது. தக்காளி ஜூஸ் குடித்து வந்தால் உடலில் உள்ள செல்கள் அனைத்தும் புத்துணர்ச்சி பெறும். தக்காளி சாறு முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் எண்ணெய் பசையை நீக்கும். மேலும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும்.
தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின், லுடீன், லைகோபின் போன்றவை சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
முட்டை
முட்டையில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகம் உள்ளது. தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
பப்பாளி பழம்
பப்பாளி பழத்தில் அதிகளவு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் சருமம் பொலிவாக இருக்கும். பப்பாளி பழம் செரிமானத்திற்கு உதவி செய்வதால் இது உடல் எடையை குறைக்க உதவும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
பசலைக்கீரை
சருமத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துக்கள் பசலைக்கீரையில் உள்ளது. பசலைக் கீரையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான மண்டலம் சீராக இயங்கும்.
ப்ராக்கோலி
ப்ராக்கோலியில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும். ப்ராக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள். இது புற்றுநோயை தடுக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அழகு முகத்துக்கு சிம்பிள் டிப்ஸ்!
ஒரு ஸ்பூன் தக்காளிச் சாறுடன் ஒரு டீஸ்பூன் பன்னீர் கலந்து தினமும் முகத்தில் தடவலாம்.
உருளைக்கிழங்குக்கு சருமத்தை பிளீச்செய்யும் தன்மை உண்டு. 2 டீஸ்பூன் உருளைக்கிழங்குச்சாறை முகத்தில் தடவி, சிறிது நேரம் சென்றதும் கழுவிக்கொள்ளலாம்.
குங்குமப்பூவுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. எனவே குங்குமப்பூ தைலத்தை சில சொட்டுகள் முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பானநீரில் கழுவலாம்.
இள நீரும் சருமத்தின் வண்ணத்தை மேம்படுத்தும். தினமும் 2 டீஸ்பூன் முகத்தில் தடவலாம்.
பப்பாளி, கேரட், ஆரஞ்சு போன்றவற்றின் சதைப் பகுதியை முகத்தில் தடவினால், முகம்பளிச்சென்று இருக்கும்.