HCL புதிய தலைவர் ரோஷினி நாடார் பற்றி ஒரு பார்வை

இந்தியாவில் உள்ள முக்கியமான IT நிறுவனங்களில் HCL நிறுவனமும் ஒன்று. HCL நிறுவனத்தை தொடங்கிய ஷிவ் நாடார் தனது பதவியை தனது மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவிடம் ஒப்படைத்துள்ளார். மேலும், ரோஷ்னி நாடார் நிர்வாக இயக்குநராகவும், தலைமை மூலோபாய அதிகாரியாகவும் செயல்பட உள்ளார்.

ரோஷினி நாடார் பற்றி சில முக்கிய தகவல்களை பார்ப்போம்.

ரோஷினி நாடார் ஷிவ் நாடாரின் ஒரே மகள். இவர் டெல்லியில் வளர்ந்தவர். HCL Corporation CEO-வாகவும், நிர்வாக இயக்குநராகவும் மற்றும் HCL Technologies துணை தலைவராகவும் இருந்தார்.

36,800 கோடி ரூபாய் மதிப்பில் 2019-ம் ஆண்டு Forbes இதழில் வெளிவந்த ‘உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்’ பட்டியலில் 100 பேரில் 54-வது இடத்தை பெற்று இருந்தார்.

Roshni Nadar
Roshni Nadar

இவரது பள்ளிப்படிப்பு வசந்த் வேலி பள்ளியிலும், பின்னர் அமெரிக்காவில் இல்லினாய் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் சார்ந்த தகவல் தொடர்பு துறையில் பட்டப்படிப்பு முடித்தார். பிறகு, Kellogg School of Management-ல் முதுநிலை வணிக நிர்வாகம் படித்தார்.

இந்தியாவில் சில நிறுவனங்களில் பணியாற்றிய பின், ஹெச்.சி.எல் கார்ப்பரேஷன் CEO மற்றும் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார்.

HCL Technologies Trustee மற்றும் VidyaGyan Leadership Academy-யின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்

HCL கார்ப்பரேஷனில் சேர்ந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் கூடுதல் இயக்குநராக 2013-ம் ஆண்டு பொறுப்பேற்றார்.

The Habitats Trust என்ற அறக்கட்டளையை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வனவிலங்குகள் பாதுகாப்பில் தனது பங்களிப்பை அளித்துவருகிறார்.

Source : Quint, NDTV

Recent Post

RELATED POST