நீங்கள் யார்? உங்கள் உடல் மொழி கூரும் உண்மைகள்

நாம் நினைக்கலாம், நம் வாய் மூலமாக பேசுவது மட்டுமே உண்மையென்று. ஆனால் நம்மை அறியாமல் நமது உடல் இரகசியமாக நாம் பேசுவது உண்மையா அல்லது பொய்யா என்று வெளிப்படுத்திவிடும், இதற்கு பெயர்தான் உடல் மொழி என்பர்.

சில நேரங்களில் நாம் நம் உடல் அசைவை கவனிக்க மறக்கலாம், ஆனால் கேட்பவருக்கு உடல்மொழி பற்றி நன்கு அறிந்து இருந்தால் நம்மை பற்றி நம் பேச்சை விட உடல்மொழி இலகுவாக புரிய வைத்துவிடும்.

இதோ சில பொதுவான உடல்மொழியும் அதன் விளக்கமும்

  • மூட்டுகளில் கை வைத்திருத்தல் : ஆர்வத்தைக் குறிக்கிறது.
  • இடுப்பில் கை வைத்திருத்தல் : பொறுமையற்ற நிலையை குறிக்கிறது.
  • முதுகுக்குப் பின்புறம் கை கட்டியிருத்தல் : சுயக் கட்டுப்பாட்டைக் குறிக்கிறது.
  • தலைக்குப் பின்புறம் கை கட்டியிருத்தல் : நம்பிக்கையாக இருக்கும் நிலையைக் குறிக்கிறது.
  • நாற்காலியின் ஒரு கைப்பிடியின் மேல் ஒரு காலைப் போட்டு உட்கார்தல் : கவனமின்மையைக் குறிக்கிறது.
  • குறிப்பிட்ட திசையில் பாதமும் கால்களும் வைத்திருத்தல் : நீங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அதிகமாக ஆர்வமுடன்  இருப்பதை குறிக்கிறது.
  • கை கட்டியிருத்தல் : பணிந்து போகும் தன்மையைக் குறிக்கிறது
  • நகத்தினை கடித்தால் : தயக்கம், பாதுகாப்பின்மையை குறிக்கிறது.
  • மூக்கினை வருடி கொண்டு இருந்தால் : சந்தேகத்தை குறிக்கிறது.
  • கன்னத்தினை தேய்த்து கொண்டு இருந்தால் : முடிவெடுக்க போகும் தருணத்தை குறிக்கிறது.
  • விரல்களால் தாளம் தட்டினால் : பொறுமையின்மை குறிக்கிறது
  • கன்னத்தில் கை வைத்து கொண்டு இருந்தால் : சிந்தனை நிலையை குறிக்கிறது
  • தலையினை அசைக்காமல் உற்று கவனித்தால் : அதிக கவனம் செலுத்துவதை குறிக்கும்.
  • காதினை வருடி கொண்டு இருந்தால் : இருமனதுடன் இருக்கும் உணர்வு.
  • பின் தலையை சொறிந்தால் : நம்பிக்கை குறைகிறது என்று அர்த்தம்.
  • விரல்களை முகம் அருகில் கோர்த்து கொண்டு இருந்தால் : அதிகாரம் செலுத்துவதை குறிக்கும்.

இதே போல் சில உடல்மொழிகளை வைத்து எதிரே உள்ளவர் பொய் கூறுகிறார் என்பதையும் கண்டறியலாம். அவை,

  • முறைத்து பார்த்தல்
  • ஆடைகளை தேவையில்லாமல் சரி செய்தல்
  • கண்களை பார்த்து பேசாமல் இருத்தல்
  • கண்களை தேய்த்தல்
  • கண்களை அதிகம் சிமிட்டுதல்

இவ்வாறு பல வழிகளில் உண்மை மற்றும் பொய் கூறுபவரை கண்டுபிடித்து விடலாம். கவனித்து பார்த்தால் உங்களுக்கும் புரியும்.

Recent Post

RELATED POST