Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

ஃபாஸ்ட் புட் சாப்பிடும் குழந்தைகள்..! பகீர் கிளப்பும் பின் விளைவுகள்..!

மருத்துவ குறிப்புகள்

ஃபாஸ்ட் புட் சாப்பிடும் குழந்தைகள்..! பகீர் கிளப்பும் பின் விளைவுகள்..!

குழந்தைகள் ஃபாஸ்ட் புட் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், அதனால் அவர்களது உடலில் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் குறித்தும் பார்க்கலாம்.

ஃபாஸ்ட் புட் என்று அழைக்கப்படும் துரித உணவுகளை இன்றைய தலைமுறையினர் அதிக அளவில் சாப்பிட்டு வருகின்றனர். இதனால், அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, மரணம் வரை அவர்களை அழைத்து செல்கிறது. இதுமட்டுமின்றி, குழந்தைகளுக்கும் தற்போதைய சூழலில், துரித உணவுகளை வழங்கி வருகின்றனர். சிறு வயதிலேயே அதற்கு அடிமையாகும் குழந்தைகள், அதிக அளவில் சாப்பிடுகின்றனர். இவ்வாறு செய்தால், பல்வேறு விதமான பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்படும்.

துரித உணவுகளை குழந்தைகள் சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்புகள்:ஃபாஸ்ட் புட்களில் எம்.எஸ்.ஜி என்ற உப்பு சுவைக்காக அதிகம் சேர்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, நாம் பயன்படுத்தும் சாதாரண உப்பையும் பயன்படுத்துகிறார்கள். இவை இரண்டும் சேரும் போது, குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே, ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, ஃபாஸ்ட் புட் உணவுகளை தரும்போது, வயிற்று வலி, தலைவலி, நரம்பியல் கோளாறுகள், வாந்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இளம் வயதினர் இரவு நேரங்களில் துரித உணவுகளை சாப்பிட்டாலே, அது அவர்களுக்கு சரியாக ஜீரணமாகாகமல் இருக்கும். ஆனால், சிலர் குழந்தைகளுக்கே இதுபோன்ற உணவுகளை இரவு நேரங்களில் தருகின்றனர். இவ்வாறு செய்வதால், அது ஃபுட் பாய்சனாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

குழந்தைகள் மிகவும் விரும்பினால், மாதம் ஒரு முறை மட்டும், பகல் நேரங்களில் துரித உணவுகளை தரலாம். ஆனால், அதுவும் சிறந்தது கிடையாது என்பது தான் உண்மை.

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top