ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது ஏன் என்று தெரியுமா?

குழந்தைகளின் உடல் பூப்போல் மென்மையானது. குழந்தைகளின் எலும்புகளும் முற்றாமல் இளம் குருத்தெலும்பாக இருக்கும்.

இந்தக் குருத்தெலும்பானது இரப்பரைப் போல வளையும் தன்மையை உடையது. இந்தக் குழந்தைப் பருவத்தில் எலும்பை வளைய பயிற்சி கொடுத்தால் கூட இலகுவாக எளிதில் வளைந்து விடும். அதே எலும்பு முற்றி விட்டால் உறுதியாகி கெட்டியாக மாறிவிடும்.

இப்படி முற்றிய எலும்பை வளைத்தால் வளைக்க முடியாது. மிகவும் கடினமாக இருக்கும். முற்றிய எலும்பை மீறி நாம் வளைக்க நினைத்தால் எலும்பு வளையாது. விறகைப் போல ஒடிந்து போய் விடும்.

இதன் காரணமாக இந்தப் பழமொழி ஏற்கப்பட்டது. குழந்தைப் பருவம் எதையும் எளிதில் கற்றுக் கொள்ளக் கூடிய பருவம். எந்தப் பயிற்சியையும் கற்றுக் கொண்டுவிடும். ஆனால் வயதான பருவத்தில்  உடையவர்களை எதற்கும் பக்குவப்படுத்த முடியாது.

Recent Post

RELATED POST