அத்தி பழம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. மேலும் சருமத்திற்கு அழகையும் தருகிறது.
ஒரு சில அழகு சாதன பொருட்களில் அத்திப் பழம் பயன்படுத்தப்படுகிறது. அது சரும பிரச்சனைகளை சரிசெய்து புத்துயிர் பெறச் செய்கிறது. அத்தி பழத்தை கூந்தலுக்கும் பயன்படுத்தலாம் இதைப்பற்றி தெளிவாக இதில் பார்ப்போம்.
அத்திப்பழத்தை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து பிறகு விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதில் மூன்று சொட்டு பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் சருமம் பிரகாசமாக மாறும். மேலும் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மாறும்.
அத்தி பழத்தை நன்றாக அரைத்து அதில் சிறிதளவு தயிரும் தேனும் கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அத்தி பழத்தில் உள்ளது. அத்தி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முடி நன்றாக வளர உதவுகிறது.