விபத்து ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்

கை, கால்கள் நமது உடலில் முக்கிய உறுப்புகள் ஆகும். யாருக்காவது விபத்து ஏற்பட்டால் முதலில் செய்ய வேண்டியது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்

அடிபட்ட இடத்தை சுத்தமான துணியால் மூடி வைக்க வேண்டும். அடிபட்டவருக்கு குடிப்பதற்கு, சாப்பிடுவதற்கு எதையும் கொடுக்கக் கூடாது

அடிப்பட்ட இடத்தில் ரத்த போக்கு ஏற்பட்டால் காயத்தை சுத்தமான துணியில் கட்டி அதற்கு அழுத்தம் கொடுத்து கையை இதயப் பகுதிக்கு மேல் தூக்கி வைக்க வேண்டும்

ரத்தப்போக்கு இருந்தால் ரப்பர், நைலான் கயிற்றைக் கொண்டு இறுக்கமாக கட்ட கூடாது

கை, கால் விரல்கள் துண்டிக்கப்பட்டால், துண்டிக்கப்பட்ட பாகத்தை சுத்தமான துணியால் மூடி அதனை தண்ணீர் புகாமல் ஒரு பாலிதீன் பையில் போட்டு வைக்க வேண்டும்

அப்படி கட்டிய பையினை சுற்றி ஐஸ் கட்டிகளை வைத்து, ஒரு பெட்டியில் அல்லது வேறு ஒரு பாலிதீன் பையில் வைக்கவும்

துண்டிக்கப்பட்ட பாகங்களை தண்ணீரிலோ அல்லது ஐஸ் கட்டியிலோ நேரடியாக வைக்கக்கூடாது. மருத்துவ அவசர ஊர்திக்கு (Ambulance – 108 – Tamilnadu) காத்திருக்காமல் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்வது நல்லது.

தீக்காயங்கள் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி என்ன?

தீக்காயங்கள் ஏற்பட்டவரை முதலில் தீ ஏற்பட்ட இடத்திலிருந்து சற்று தூரமாக கொண்டு செல்ல வேண்டும் பிறகு தீயை அணைக்க வேண்டும்

அணிந்திருக்கும் ஆடைகளை கழற்றி குளிர்ந்த நீரை அதிக அளவில் ஊற்றி காயத்தை குளிர் படுத்த வேண்டும்

விபத்துக்குள்ளான நபருக்கு குடிப்பதற்கு தண்ணீரோ அல்லது வேறு ஏதாவது பானமோ கொடுக்கக்கூடாது

தீக்காயத்திற்கு மேல் சுத்தமான துணியைக் கொண்டு மூடவும். காயத்திற்கு மேல் எந்தவித எண்ணெயோ, சாம்பலே, மஞ்சளோ போடக்கூடாது

அருகிலுள்ள தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்

முகத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டால்…

காயங்கள் பெரும்பாலும் தலை காயங்களுடன் இணைந்து இருக்கும் அப்படிப்பட்டவரை நாம் அனாவசியமாக அசைக்க வேண்டாம்

தலை மற்றும் கழுத்துப் பகுதியை நேராக வைத்துக் கொள்ள வேண்டும்

வாய் மற்றும் மூக்கு பகுதிகள் ரத்தப்போக்கு ஏதேனும் இருந்தால் அடிபட்டவரை ஒரு பக்கமாக சாய்த்தவாறு இருக்க வேண்டும்

காயம்பட்ட இடத்தில் எந்த ஒரு பொருளையும், துணி, பஞ்சு உள்பட பொருட்களை நுழைக்க கூடாது

எது எப்படி ஆயினும் தாமதிக்காமல் மருத்துவரிடம் கொண்டு செல்வது சால சிறந்தது.

Recent Post

RELATED POST