ஆளி விதையில் ஒமேகா 3, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. இவ்வளவு சத்துக்களை கொண்ட ஆளிவிதையை தினசரி உணவில் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம். அல்லது பொடியாக்கி உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம். ஆளி விதையில் உள்ள வைட்டமின் ஈ, சரும ஆரோக்கியம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும்.
ஆளி விதையில் 20 சதவீதம் புரதச் சத்து நிறைந்துள்ளது. இது உடல் எடையை எளிதில் குறைப்பதற்கு உதவுகிறது.
ஆளி விதையில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மார்பகம், புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆளி விதைகள் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இதனை சரியான அளவில் சாப்பிட வேண்டும். அதிகம் பசி எடுக்காது.
ஆளி விதையில் லிக்னன்ஸ்’ (Lignans) என்ற ஆன்டிஆக்சிடன்ட் அதிகளவில் உள்ளது. இது உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்து தருகிறது. செல்களின் செயல்பாட்டை அதிகரித்து தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது.
பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு காரணமாக ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு ஆளிவிதை சிறந்த மருந்து. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வது குறையும். ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும். பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
ஆளி விதைகளால் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளை இன்றைக்கு பலரும் சாப்பிட தொடங்கியுள்ளனர். மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் இதை சாப்பிட வேண்டாம்
ஆளி விதையின் தீமைகள்
ஆளி விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இதனை அதிகம் சாப்பிடக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும்.
ஆளி விதையை சாப்பிட்ட பிறகு அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையென்றால் மலச்சிக்கல், வாய்வு தொந்தரவு போன்றவைகள் ஏற்படும்.
கர்ப்ப காலங்களில் ஆரம்பக்கட்டத்தில் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.