பிளிப்கார்ட் நிறுவனத்தின் கதை

இன்று உலகமே இணையத்தில் தான் இயங்கி கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு பொருளை வாங்குவதற்கு கூட்டநெரிசலில் கடைகளுக்கு சென்று அந்த பொருளை வாங்குவோம்.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் நமக்கு தேவையான பொருட்களை வீட்டில் இருந்துகொண்டே ஆன்லைனில் நம்மால் வாங்க முடியும். இதற்கு ஸ்மாட் போனும் இன்டர்நெட் இணைப்பும் இருந்தால் போதும்.

தற்போது இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகங்கள் கொடி கட்டி பறக்கின்றன. அதில் ஒன்றுதான் ஃபிலிப் கார்ட். இந்த நிறுவனத்தை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

பிலிப்கார்ட் (Flipkart) பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இணையவழியாக பொருட்களை விற்பனை செய்யும் ஒரு வலைத்தளமாகும்.

ஸ்டார்ட் ஆப்’ நிறுவனமாக, பூஜ்யத்தில் இருந்து உருவானதுதான் பிலிப்கார்ட் நிறுவனம். இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளது.

இந்தியாவின் இணையவழி பொருட்கள் விற்பனை நிறுவனங்களில் பிலிப்கார்ட் மிகப்பெரியதாகும். புத்தகம் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்து பொருட்களும் இதில் கிடைக்கும்.

2 பெட்ரூம் கொண்ட வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய நிறுவனம், இன்று 8 லட்சம் சதுரடியில் ஒரு மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது.

இந்த அபார வெற்றிக்கு காரணமானவர்கள் பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் என்ற இரண்டு இளைஞர்கள்.

பின்னி பன்சால் இந்தியாவில் உள்ள சண்டிகரை சேர்ந்தவர். டில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கணினி பொறியியல் பட்டம் பெற்றவர். இவருடைய தந்தை வங்கியில் ஓய்வுபெற்ற தலைமை மேலாளர். தாய் அரசாங்க துறையில் பணியாற்றுபவர்.

சச்சின் பன்சால் இந்தியாவில் உள்ள சண்டிகரைச் சேர்ந்தவர். இவர் செயின்ட் அன்னேஸ் கான்வென்ட் பள்ளியில் படித்தார். இவருடைய தந்தை தொழிலதிபர் ஆவார்.

பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் இருவரும் 2004ஆம் வருடம் டெல்லி ஐஐடியில் படித்தனர். பிறகு இருவருக்கும் அமேசானில் வேலை கிடைத்தது. இருவரும் அமேசானில் பணியில் இணைந்தார். அமேசானில் நல்ல வேலை, நல்ல சம்பளம் எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்தது.

நாம் ஏன் அடுத்தவருக்காக வேலை செய்ய வேண்டும்? நாமும் இதேபோல் இந்தியாவில் ஒரு ஆன்லைன் ஸ்டோர் ஆரம்பித்தால் என்ன? என்ற சிந்தனை இருவருக்கும் உதித்தது.

அமேசானில் இருந்து வெளியேறிய இருவரும் இந்தியாவுக்கு வந்தனர். பெங்களூரில் இரண்டு பெட்ரூம் கொண்ட அப்பார்ட்மெண்டை வாங்கி அதில் தங்களது பிலிப் கார்ட் நிறுவனத்தை தொடங்கினார்கள்.

பெங்களூருவில் இருக்கும் அனைத்து கடைகள், மால்கள், நூலகங்கள் போன்ற அனைத்து இடங்களுக்கும் சென்று 10% தள்ளுபடியில் அனைத்து புத்தகங்களும் இங்கு கிடைக்கும். Free Door Delivery செய்வதாகவும் விளம்பரம் செய்தனர்.

நிறுவனம் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகியும் ஒரு ஆர்டர்கூட இவர்களுக்கு வரவில்லை. ஒரு வாரம் கழித்து ஆந்திரப் பிரதேசத்திலிருந்து சந்திரன் என்பவர் Leaving Microsoft to Change the World என்ற புத்தகத்தை பிலிப் கார்ட்டில் முதல் ஆர்டர் செய்தார். ஆனால் அந்த புத்தகம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இறுதியில் சப்னா புக்ஹவுஸ் என்ற ஒரு புத்தகக்கடையில் அந்த புத்தகம் கிடைத்தது. அதனை விலைக்கு வாங்கி வாடிக்கையாளருக்கு முதல் முறையாக டெலிவரி செய்தனர்.

2007ம் ஆண்டு இந்நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்தது. ஆன்லைனில் புத்தகம் வாங்குவது என்றால் அனைவரும் பிலிப் கார்ட்டை பரிந்துரைக்க ஆரம்பித்தனர் அதற்கு முக்கிய காரணம் 10% தள்ளுபடி மற்றும் Free Door Delivery என்ற திட்டம்தான்.

2011-ல் பெங்களூரில் ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து பணிபுரிய ஆரம்பித்தனர். அதன்பின் இந்நிறுவனம் 400-500 பேர் பணிபுரியும் அளவிற்கு வளர்ச்சியடைந்தது.

இந்தியர்களிடம் நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கே பொருளை வாங்கியபின் காசு கொடுக்கும் திட்டம் (Cash on Delivery) கொண்டு வரப்பட்டது.

இதன்பின் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்தது. இதனால் பிலிப்கார்ட் நிறுவனம் இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது. குறிப்பாக மொபைல் போன் சந்தை பெரிய அளவில் இந்தியாவில் விரிவடைய தொடங்கியது.

பிலிப்கார்ட்டின் இந்த வளர்ச்சியை கண்டு சீனாவிலிருந்து Tencent என்ற கம்பெனியும் ஜப்பானிலிருந்து Soft Bank என்ற கம்பெனியும் பிலிப்கார்ட்டில் 10 மில்லியன் டாலரை முதலீடு செய்தனர். இதன் மூலம் பிலிப்கார்ட் நல்ல முன்னேற்றம் அடைந்தது.

Recent Post

RELATED POST