மாம்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது நல்லதா?

முக்கனிகளில் முதல் கனி மாம்பழம். கோடைகாலம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மாம்பழம் தான். இந்தியாவில் மாம்பழம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மாம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. ஆனால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

தயிர் சாதம் சாப்பிடும் போது மாம்பழத்தை தவிர்க்க வேண்டும். உடலுக்கு சூட்டை தரும் மாம்பழத்துடன், குளிர்ச்சியை தரும் தயிரை எடுத்துக்கொண்டால், தோல் பிரச்சனைகள், உடலில் நச்சுகள் சேருதல், ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

மாம்பழம் சாப்பிட்ட உடனேயே கசப்பான உணவுகளை சாப்பிடக்கூடாது. இது குமட்டல், வாந்தி மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

மாம்பழம் சாப்பிட்ட பிறகு காரமான உணவு அல்லது மிளகாய் அதிகம் உள்ள உணவை சாப்பிடுவது வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே மாம்பழம் சாப்பிட்ட பிறகு காரமான உணவுகளை தவிர்த்திடுங்கள்.

மாம்பழத்தை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் அருந்தும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதை உடனே நிறுத்துங்கள். ஏனென்றால் இது உங்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் வயிற்று வலி, அமிலத்தன்மை ஆகியவை ஏற்படலாம். எனவே மாம்பழம் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து தண்ணீர் அருந்தலாம்.

மாம்பழம் சாப்பிடும் போது குளிர்பானங்களை அருந்துவது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

Recent Post