தலையில் வழுக்கை வராமல் இருக்கணுமா…இந்த உணவுகளை சாப்பிடுங்க

முடி உதிர்வு, வழுக்கை போன்ற பிரச்சனைகளை ஆண்களும் பெண்களும் சந்தித்து வருகின்றனர். வரும் முன் காப்போம் என்பது போல இதை தடுக்க நம் கண் முன்னே பல உணவுகள் இருக்கின்றன. இதை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கூந்தலுக்கு பயன்படுத்தலாம். மேலும் நெல்லிக்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதால் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடியை வலுவாக்கும்.

திரிபலா

மருத்துவ குணம் நிறைந்த திரிபலா முடி உதிர்தலை கட்டுப்படுத்தும். ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் இந்த பொடியை கலந்து தினமும் இரவில் குடித்து வந்தால் முடியின் வேர்களை பலப்படுத்தும். மேலும் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும்.

கீரை

அதிகமாக முடி கொட்டுவது இரும்புச்சத்து பற்றாக்குறையாக இருக்கலாம். உடலுக்கு இரும்புச்சத்து கொடுப்பதில் கீரை முதன்மையானது. எனவே உணவில் அடிக்கடி கீரைகளை சேர்த்து வருவது முடிக்கு நல்லது.

வெந்தயம்

வெந்தயம் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் குளிர்ச்சியை தரும். இதில் உள்ள இரும்பு மற்றும் பொட்டாசியம் முடி உதிர்தலை தடுத்து முடி நரைப்பதையும் தடுக்கிறது.

கறிவேப்பிலை

தினசரி உணவில் கறிவேப்பிலையை சேர்த்து வந்தால் இளநரை தடுக்கப்பட்டு முடி கருமையாக வளர உதவும். மேலும் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

நெல்லிக்காய்

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் மயிர்க்கால்களை வலுப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் முடிக்கு பிரகாசம் அளிக்கின்றன. நெல்லிக்காயை எப்படி எடுத்துகொண்டாலும் அவை பயனளிக்கும்.

பாதம்

தினமும் 6 பாதம் பருப்பை நீரில் ஊறவைத்து அதன் தோலை உரித்து சாப்பிட வேண்டும். இதில் உள்ள சத்துக்கள் முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது. கூந்தல் வளர்ச்சியை வலுப்படுத்தி வழுக்கை வராமல் தடுக்கும்.

Recent Post