கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

கர்பிணிப் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தை பிறக்கும் வரை பல விஷயங்களை பின்பற்ற வேண்டியிருக்கும்.

குழந்தை எந்த வித பாதிப்புமின்றி ஆரோக்கியமாக பிறக்க, இவற்றை செய்ய வேண்டும். இவற்றை சாப்பிட வேண்டும். இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளது. அதுபோல எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று வரைமுறை உள்ளது. அவ்வாறு அரவே தவிர்க்க வேண்டிய உணவுகளில், சில முக்கியமானவை உங்களுக்காக…

கஃபேன் (caffeine) :

பெண்கள் கர்ப்பகாலத்தில் அதிகமாக கஃபேன் உட்கொள்ள கூடாது. அளவுக்கு மீறிய கஃபேன் என்பது அபாஷன் அல்லது குறைந்த எடையில் குழந்தை பிறந்தல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். டீ, காபி, கோலா, சாஃப்ட் டிரிங்ஸ், சாக்கலேட் உள்ளிட்ட பொருட்களில் கபேன் காணப்படுகிறது. நாளுக்கு 200 மி.கி குறைவான கஃபேன் எடுப்பதில் பிரச்சனை இல்லை. ஒரு கப் டீயில் 75 மி.கி, ஒரு கப் கோலாவில் 40 மி.கி, ஒரு சாக்லேட்டில் 50 மி.கி, ஒரு கப் காபியில் 100 மி.கி , ஒரு பில்டர் காபியில் 125 மிகி என்ற அளவுகளில் கபேன் இருக்கிறது. எனவே, கவனமாக இந்த பொருட்களை உட்கொள்ளுங்கள்.

ஈரல் உணவு வகைகள் :

அசைவம் சாப்பிடும் பெண்கள் கர்ப்பக்காலத்தில் உணவில் ஈரல் உணவு வகைகளை தவிர்த்து விட வேண்டும். அதில் அதிகமான விட்டமின் A உள்ளது. அதிகமான விட்டமின் ஏ என்பது வயிற்றில் உள்ள குழந்தையை பாதிக்கும். வேறு உணவுகள் மூலம் தேவையான அளவு விட்டமின் ஏவை பெறலாம்.

காய்ச்சாத பால் :

சிலர் நேரடியாக கரந்த பாலை வாங்கி பயன்படுத்துவர். அது மாட்டுப்பாலாக இருந்தாலும், ஆட்டு பாலாக இருந்தாலும் கண்டிப்பாக காய்ச்சிய பிறகு தான் கர்பிணி பெண்களுக்கு கொடுக்கவேண்டும். கடைகளில் விற்கப்படும் பாக்கெட் பால் பேஸ்டரைஸ்டு எனப்படும் 100 டிகிரி செல்சியஸிற்கு மிதமான சூட்டில் சுட வைக்கப்படுகிறது. இந்த முறையின் போது பாலில் உள்ள சில கேடு விளைவிக்கும் பேக்டிரீயாக்கள் அழிந்து விடுகின்றன. இருப்பினும் நன்கு காய்ச்சிய பிறகே கர்பிணிகள் அருந்தவேண்டும்.

ஆல்கஹால் (alcohol) :

கர்ப்ப காலத்தில் முற்றிலுமாக ஆல்கஹாலை தவிர்ப்பது நல்லது அது எந்த விடிவமாக இருந்தாலும் எவ்வளவு அளவாக இருந்தாலும் முதல் மூன்று மாதத்திற்கு கட்டாயம் தொடக்கூடாது. கர்ப்பகாலத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஓவ்வொரு சொட்டு ஆல்கஹாலும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

பச்சைக் கறி :

சிக்கன் மட்டன் என எந்த சமைக்காத பச்சை கறிகளையும் சாப்பிடக் கூடாது. இது டோக்ஸா பிளாஸ்மோசிஸ் (Toxoplasmosis) எனும் வியாதியை ஏற்படுத்த வழி வகுக்கும். அதைப் போல சமைக்காத பச்சை முட்டையையும் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.

Recent Post