கல்லீரலில் உள்ள கொழுப்பை நீக்கும் வீட்டு உணவுகள்

மதுப்பழக்கம், அதிக உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற காரணங்களால் கல்லீரலில் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. இதனால் உடலில் இருந்து வெளியேற வேண்டிய மோசமான நச்சுத்தன்மை வெளியேறாமல் உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

எந்த உணவுகள் உங்களின் கல்லீரலை ஆரோக்கியமாக பாதுகாக்கும் என்பதை இதில் பாப்போம்.

கோதுமை புல்

கோதுமை புல்லில் குளோரோபில் அடங்கியுள்ளதால் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. இதனால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட்டில் நைட்ரேட்ஸ் மற்றும் பீட்டாலைன்கள் என்று சொல்லக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்டுகள் உள்ளன. இது கல்லீரல் வீக்கத்தை சரி செய்யும். மேலும் இது இயற்கையான நச்சு போக்கும் கூறுகளை உருவாக்குகிறது.

திராட்சை

சிகப்பு மற்றும் பர்பிள் நிற திராட்சைகளில் அதிகளவு மருத்துவ குணங்கள் உள்ளது. இது உங்களின் ஆன்டிஆக்ஸிடன்ட் அளவை உயர்த்தும். கல்லீரலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்கும்.

வால்நட்ஸ்

கொழுப்பு நிறைந்த கல்லீரலை குறைப்பதற்கு வால்நட்ஸ் உதவுகிறது. பொதுவாகவே வால்நட்ஸ் இதயம் உள்ளிட்ட பல்வேறு பாகங்களுக்கு நன்மை தரும். வால்நட்ஸ் கல்லீரலுக்கு அதிக நன்மை விளைவிக்க கூடியது.

வால்நட்ஸில் ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிபினால் ஆன்டிஆக்ஸிடண்டுகள் காணப்படுகின்றன.

மேலே கொடுக்கப்பட்ட உணவுகள் உங்கள் மருத்துவரிடம் அனுமதி கேட்டுக்கொண்டு உங்கள் உடல்நிலைக்கு ஏற்றவாறு நீங்கள் எடுத்து கொள்ளலாம்.

Recent Post