நரிகள் பற்றிய சில வியப்பூட்டும் தகவல்கள்

உலகில் சுமார் 27 நரியினங்கள் உள்ளன. நரி இனமானது உலகில் ஆஸ்திரேலியாவைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. நரி நாய்ப் பேரினத்தைச் சேர்ந்த பாலூட்டி காட்டு விலங்கு.

நரி மணிக்கு 16 கி.மீ வேகத்தில் ஓடும். நரி வெப்பம் தாங்கக்கூடியது. மாலைப் பொழுதில் வேட்டையாட வந்து, அதிகாலைப் பொழுதிற்குள் வேட்டையாடி முடிக்கும்.

இறந்துபோன விலங்குகளின் எச்சங்களை உண்பதில், கழுகுகளுடன் போட்டியும், சண்டையுமிட்டு, உண்ணும் ஒரே விலங்கு நரி மட்டுமே. இருட்டில் பார்க்கக்கூடிய வகையில் அவர்களின் கண்கள் பிரத்யேகமாக பொருத்தப்பட்டுள்ளன .

பூமியின் காந்தப்புலங்களைப் பயன்படுத்தி தங்கள் இரையின் தூரத்தையும் திசையையும் தீர்மானிக்க உலகின் முதல் விலங்குகள் நரிகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Recent Post