அதிரடியாக உயர்ந்த பூண்டின் விலை…ஒரு கிலோ எவ்வளவு?

தமிழகம் மட்டுமின்றி ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து கோயம்பேடு சந்தைக்கு அதிக அளவில் பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

தினசரி 150 டன் அளவிலான பூண்டு விற்பனைக்கு வந்த நிலையில் . தற்போது மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து 25 டன் பூண்டு மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக பூண்டு விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

மொத்த விற்பனையில் கிலோ ரூ. 300 முதல் ரூ. 350-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முதல் ரக பூண்டு தற்போது ரூ. 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ. 450 முதல் ரூ. 550 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தின் விலை ஒருபுறம் உயா்ந்து வரும் நிலையில், பூண்டு விலையும் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.

ஜனவரி மாத இறுதியில் வரத்து அதிகரிக்கும் போது, பூண்டு விலை படிப்படியாக குறையும் எனவும் கோயம்பேடு மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recent Post

RELATED POST