பூண்டை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பூண்டில் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கந்தகம் அதிகம் உள்ளது. மிதமான அளவில் மெக்னீசியம், மாங்கனீசு, இரும்புச் சத்து உள்ளது. மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

ஒரு ஜாடியில் சுத்தமான தேனை ஊற்றி அதில் பூண்டுகள் போட்டு ஒரு வாரம் ஊற வைக்கவும். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை அரை டீஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும். உணவு உண்ட பிறகு சாப்பிடுவதைவிட, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

உடல் எடை அதிகரிக்கவும், குறைக்கவும் இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயன்படுகிறது. உடல் எடையை குறைக்க தண்ணீரிலும், உடல் எடையை அதிகரிக்க பாலில் தேன் கலந்து பருகலாம்.

தேனில் ஊறவைத்த பூண்டை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற தொற்று கிருமிகள் ஏற்படாமல் தடுக்கிறது. பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்று நோய்களையும் இது தடுக்கிறது.

Recent Post