கேஸ் சிலிண்டர் வேகமா காலியாகுதா? இதை ட்ரை பண்ணுங்க

சமையலைத் தொடங்குவதற்கு முன்பே வெட்டப்பட்ட காய்கள் மற்றும் தேவையான பாத்திரங்களைத் தயாராக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்துவிட்டு ஒவ்வொரு பொருட்களாக தேடித் தேடி எடுத்துப் போடுவதன் மூலம் கேஸ் அதிகம் செலவாகும்.

ஃப்ரிட்ஜில் வைத்த உணவு மற்றும் குழம்பு பாத்திரத்தைச் சூடுபடுத்தும் முன், அதை வெப்பநிலையில் சிறிதுநேரம் வைக்கவும். ஃபிரிட்ஜில் இருந்து நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்தினால் கேஸ் செலவு அதிகரிக்கும்.

பாத்திரத்தை அடுப்பில் திறந்து வைத்து சமைப்பதைத் தவிர்க்கவும். இதன் மூலம் விரைவில் சமைக்கப்படுவதோடு, ளிபொருளையும் சேமிக்க முடியும்.

பிரஷர் குக்கர் மூலம் சமைப்பது நல்லது. அகலமான பாத்திரத்தில் சமைப்பது எரிபொருளைச் சேமிக்க உதவும்.

வெந்நீர் வைக்க கேஸ் ஸ்டவ்வுக்குப் பதிலாக rod water heater பயன்படுத்தலாம்

இண்டக்ஷன் ஸ்டவ்வில் செய்ய முடிகிற சமையலை அதிலேயே செய்யலாம். கேஸ் ரெகுலேட்டர், ட்யூப், பானர் ஆகியவற்றில் கசிவு இருக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவும்.

சமையல் முடிந்தவுடன் ரெகுலேட்டர் சுவிட்சை ஆகப் செய்ய மறக்க வேண்டாம்.
வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது. இது உணவினைச் சூடு செய்வதை தவிர்க்கும்.

அதிக நேரம், வேக வேண்டிய கடலை, பருப்பு போன்றவற்றை முன் கூட்டிய ஊறவைத்தல் நல்லது.

Recent Post

RELATED POST