வாயுத் தொல்லையை விரட்டும் உணவுகள்

யாருக்கெல்லாம் பிரச்சனை ஏற்படும்?

1. ஒரு சிலர் தற்போது செல்போன் அதிகமாக பயன்படுத்தும் காரணங்களால் தூக்கம் வராமல் அவதியடைந்து வருகின்றனர். இவ்வாறு தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு செரிமான பிரச்சனையும், அதன் வழியாக வாயுத் தொல்லையும் ஏற்படும்.

2. புரத உணவுகளை அதிகமாக சாப்பிடும் நபர்களுக்கு வாயுத் தொல்லை ஏற்படும். எனவே, புரத உணவு அதிகமாக சாப்பிடும்போது, காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதை வழக்கமாக வையுங்கள்.

3. உப்பு, காரம், மசால போன்றவை அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடும்போது, வாயுத்தொல்லை ஏற்படும்.

4. புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும்போது, அவற்றை வேகவைத்து சாப்பிடவும், எண்ணெய் போன்றவற்றில் பொறித்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும்.

வாயு தொல்லை நீங்க வீட்டு மருத்துவம்

வாயுவினால் உண்டாகும் வயிற்று வலிக்கு சிறிதளவு பெருங்காயத்தை நெய்யில் பொரித்து சாப்பிட வேண்டும்.

இரண்டு வெற்றிலையுடன் நான்கு பல் பூண்டு, நான்கு மிளகு சேர்த்து, மை போல அரைத்து சாப்பிட வேண்டும். பிறகு ஒரு டம்ளர் மோர் குடிக்கவும். இதனால் வாயு, வயிற்றுப் பொருமல் குணமாகும்.

இஞ்சி, சுக்கு, கடுக்காய் இவை மூன்றும் வாயுப் பிடிப்பை நீக்கும் மருந்து.

புதினா துவையல் அல்லது புதினா பொடியை சாப்பிட்டு வர வாயுத்தொல்லை நீங்கும்.

வெள்ளைப் பூண்டினை பசும்பாலில் வேக வைத்து, பிறகு அந்த பூண்டையும் பாலையும் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை பறந்துவிடும்.

அஜீரணம், வயிற்று வலி, வாயு இவை மூன்றும் குணமாக குப்பைமேனி இலையை காயவைத்து, பொடி செய்து காலையும் மாலையும் மோரில் கலந்து சாப்பிடவேண்டும்.

வாழைப்பழம் மிகச் சிறந்த பலனை தரும். வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் உடனடியாக வாழைப் பழம் சாப்பிட்டால் கட்டுப்படுத்திவிடும்.

தினமும் பேரிக்காய் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை உண்டாகாது. இது ஜீரண சக்தியையும் தூண்டும்.

சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

Recent Post

RELATED POST