பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு : தலைமறைவான மதபோதகர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள ஒரு தேவாலயத்திற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தேவாலயத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதனை கண்டித்து கடந்த ஜூலை 18 ஆம் தேதி நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா பேசினார். அப்போது இந்துமத கடவுள்கள குறித்தும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார்.

கடந்த 20 ஆம் தேதி அருமனை காவல் நிலையத்தில் மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குhdபதிவு செய்யப்பட்டது.

Advertisement

கைதுக்கு பயந்து தலைமறைவாக இருந்த மதபோதகரை போலிசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே போலீசார் இன்று கைது செய்து அருமனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.