நெய் இருந்தால் போதும்.. முகத்திற்கு வரும் கோடான கோடி நன்மைகள்.

அதிக நன்மைகளை தரும் உணவுப் பொருட்களில் முக்கியமான ஒன்று நெய். இதனை உணவில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், உடல் வலிமை பெறும். உணவாக உட்கொள்வது மட்டுமின்றி, வெளிப்புறங்களில் பயன்படுத்துவதற்கும் மிகவும் ஏற்ற ஒரு பொருள். தற்போது அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இந்த கட்டூரையில் விளக்கமாக பார்க்கலாம்.

நெய் தரும் நன்மைகள்:

வறண்ட சருமம்:
வறண்ட சருமத்தால் பாதிக்கப்படும் பலர், எந்தவித முயற்சி எடுத்தும் பலன் அளிக்காமல் அவதியடைந்து இருப்பார்கள். அவர்கள் அனைவரும், நெய்யை முகத்தில் தடவி வந்தால், வறண்ட சருமப் பிரச்சணை விரைவில் சரியாகிவிடும்.

முகச்சுருக்கங்கள்:
வயதான பிறகு வரும் சுருக்கங்கள், சிலருக்கு இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதில், வயது அதிகமாக உடையவர்களை போல இளம் வயதினர் தோற்றம் அளிக்கின்றனர். இதனால், பொதுவாக வெளியில் செல்வதையே பலர் தவிர்க்கின்றனர். இந்த பிரச்சனைகள் உள்ளவர்களும், நெய்யை முகத்தில் தடவி வந்தால், முகச்சுருக்கங்கள் விரைவில் சரியாகும்.

புத்துணர்ச்சி:
குளிப்பதற்கு முன்பு, குளியல் எண்ணெயுடன், 10-ல் இருந்து 15 சொட்டுகள் நெய் விட்டு, கை, கால்கள் ஆகியவற்றில் தடவி விடவும். 1 மணி நேரத்திற்கு பிறகு தொடர்ந்து குளித்து வந்தால், மிகவும் பிரெஷ்ஷாகவும், புத்துணர்ச்சியாகவும் உணர்வீர்கள்.

முகப்பொழிவு:
முகம் பொழிவு இழந்து காணப்பட்டால், கடைகளில் விற்கும் கண்ட கண்ட க்ரீம்களை முகத்தில் பூசாமல், நெய் தடவி வந்தால், இந்த பிரச்சனை உடனே சரியாகும்.

உதடு:
பீடி, சிகரெட், மது போன்ற எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாமல் இருப்பவர்களுக்கும், உதடு கருமை நிறத்தில் மாறி விடும். அவர்கள் அனைவரும், உதட்டில் நெய் தடவி வந்தால், வறட்சி நீங்கி, பிங்க் உதடு கிடைக்கும். தூங்கும் முன் தினமும் உதட்டில் நெய் தடவி மசாஜ் செய்யலாம். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து கருமையான உதடு மாறும்.

Recent Post

RELATED POST