நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

கோவில்களில் அதிகாலை, நண்பகல், அந்திப்பொழுதில் நெய்தீபம் ஏற்றுவது நல்ல பலனைத் தரும். நெய் தீபம் ஏற்றுவதால் சகல தோஷங்களும் நீங்கும்.

நெய் தீபம் லட்சுமிக்கு உகந்தது. வீட்டில் நெய் விளக்கு ஏற்றி லட்சுமியை வழிபட்டு வந்தாள் லட்சுமி நம் இல்லம் தேடி விரைவில் வருவாள்.

சுத்தமான நெய் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது.

குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்கள் விலக உடனே அருகில் உள்ள கோவிலில் நெய் தீபம் ஏற்றி வைத்தால் அந்த வினாடியே கஷ்டங்கள் குறையும் என கூறப்படுகிறது. நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் கிரக தோஷங்கள் விலகி வருமானம் அதிகரிக்கும்.

சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி 12 முறை சுற்றி வர வேண்டும். இதேபோல் 48 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் வழக்கு சாதகமாகும். இதேபோல் 21 செவ்வாய்க்கிழமை நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பில்லி சூனியம் போன்ற தீய சக்திகள் விலகும்.

அமாவாசை காலங்களில் நெய்தீபம் ஏற்றி பெருமாளை வணங்கி வந்தால் பித்ரு தோஷம் நீங்கும். வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்ட நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கும்.

நெய் விளக்கு ஏற்றிய பிறகு கோவில் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வந்தால் நினைத்த காரியம் கைகூடும். அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.

பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் 4:30 மணி முதல் 6 மணிக்குள் விளக்கேற்றுவது நல்லது. அதேபோல் மாலையில் 4:30 மணி முதல் 6 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும். துர்க்கை அம்மன் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றினால் சாபம் நீங்கி நல்லது நடக்கும்.

Recent Post