ஒட்டகச்சிவிங்கி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

ஒட்டகச்சிவிங்கி உலகின் உயரமான பாலூட்டியாகும். புதிதாகப் பிறந்த ஒட்டகச்சிவிங்கிகள் கூட பெரும்பாலான மனிதர்களை விட உயரமானவை.

ஒட்டகச்சிவிங்கி ஆங்கிலத்தில் Girraffe என்று அழைக்கப்படுகின்றது. இந்த அரேபிய மொழிச் சொல்லுக்கு ‘மிகவும் வேகமாக நடக்கும் விலங்கு’ என்று அர்த்தம். ஒட்டகச்சிவிங்கியானது பிறக்கும் போது இரண்டு மீட்டர் உயரம் அளவுள்ளதாக இருக்கும்.

Also Read : நீர் யானை பற்றிய தகவல்கள்

ஆண் ஒட்டகசிவிங்கியானது பெண் ஒட்டகச்சிவிங்கியைவிட சற்று உயரமாக வளரும். பெண் ஒட்டகச்சிவிங்கிகள் 15 அடி உயரம் வரை வளரும்.

ஒட்டகச்சிவிங்கியின் நாக்குகள் நீலம் கலந்த ஊதா நிறத்தில் இருக்கும். மேலும் 45 முதல் 50 செமீ நீளம் கொண்டது. பெண் ஒட்டகச்சிவிங்கி நின்று கொண்டு பிரசவிக்கும். இவை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் எழுந்து நிற்கும்.

ஒட்டகச்சிவிங்கிகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வோர் ஒட்டகச்சிவிங்கிக்கும் உடலில் உள்ள கோடுகள், புள்ளிகளில் சிறிய வித்தியாசம் இருக்கும். ஒட்டகச்சிவிங்கி தன் நீண்ட கழுத்தின் மூலம் எதிரிகள் வருவதை விரைவாக அறிந்துகொள்கிறது.

Also Read : நெருப்புக்கோழி பற்றிய தகவல்கள்

ஒட்டகச்சிவிங்கிகளின் கழுத்துப் பகுதியில் மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லாத அளவிற்கு சிறப்பான வால்வுகள் அமைந்துள்ளன. ஒட்டகச்சிவிங்கியானது தண்ணீரைக் குடிக்கத் தலையை கீழே இறக்கும் போது, இந்த வால்வுகள் தானாகவே மூடிக் கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளன. இதனால் தலைக்கும் மூளைக்கும் வேகமாக இரத்தம் அனுப்பப்படுவது தவிர்க்கப்படும்.

ஒட்டகச்சிவிங்கியின் இதயம் சுமார் 11 கிலோ எடை இருக்கும். நில வாழ் விலங்குகளில் மிகப் பெரிய இதயம் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு மட்டுமே உள்ளது.

Recent Post