எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?

தினந்தோறும் இறைவனை வணங்குவது மனதுக்கு அமைதியை தரும். அதில் ஒவ்வொரு கிழமைகளில் ஒவ்வொரு தெய்வத்தை வணங்கி வருவது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது என்பதை இதில் பார்ப்போம்.

ஞாயிறு

ஞாயிற்று கிழமைகளில் “சிவலிங்க தரிசனம்” செய்து வந்தால் தீராத நோய்கள் தீரும். வேலை கிடைக்கும். ஞாயிற்று கிழமை என்பது அக்கினி பகவானுக்கு உரிய நாளாகும். ஞாயிற்று கிழமைகளில் சூரிய உதயத்தை நமஸ்காரம் செய்து வந்தால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

திங்கள்

திங்கள் கிழமைகளில் காலையில் எழுந்ததும் பெற்றோரை வணங்க வேண்டும். பிறகு குளித்து முடித்த பிறகு திருநீர், குங்குமம் அணிந்து பார்வதி அம்மனை வணங்கி வந்தால் பெண்களுக்கு நல்ல வாழ்கை துணை அமையும். திங்கள் கிழமை விநாயகருக்கு உரிய நாள். விநாயர்கர் கோவிலுக்கு சென்று மாம்பழம், லட்டு, தேங்காய் படைத்து சூறைத் தேங்காயை உடைத்து விட்டு வந்தால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும்.

செவ்வாய்

செவ்வாய் கிழமைகளில் முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வணங்கி வந்தால் வாழ்க்கையில் நற்பலன்கள் உண்டாகும். செவ்வாய் கிழமை முருகனை வழிபட உகந்த நாளாகும். முருகனுக்கு எலுமிச்சம்பழம் மாலை அணிவித்து பூஜை செய்து வந்தால் எதிரி தொல்லை, செய்வினை கோளாறு போன்ற தீய சக்திகள் அடங்கி விடும்.

புதன்

புதன் கிழமைகளில் கருட பகவான், சரஸ்வதி, அரும்பா தேவி, மாயாக்காளி ஆகியோரை வணங்கி வர வேண்டும். இந்நாளில் வடக்கு பக்கம் திரும்பி குபேர பகவானை நினைத்து வணங்கினால் பணவரவு கூடும். குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

வியாழன்

தேவ குருவின் புனித நாள் வியாழக்கிழமை. வியாழக்கிழமைகளில் காலை அல்லது மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் குருவை வணங்கி வந்தால் குழந்தை பாக்கியம், உயர் பதவி கிடைக்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், ஸ்ரீ ராகவேந்திரர் போன்ற கோவில்களுக்கு செல்வது மன அமைதியை தரும். இந்நாளில் யானையிடம் ஆசீர்வாதம் பெறுவது நன்மை தரும்.

வெள்ளி

வெள்ளிக்கிழமை என்பது மஹாலக்ஷ்மி அருள் பெற்ற நாளாகும். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனுக்கு அதிதேவதையான ஸ்ரீ லக்ஷ்மியை வணங்கி வந்தால் குடும்பத்தில் செல்வசெழிப்பு உருவாகும். வெள்ளி கிழமை விரதமிருந்து மஹாலக்ஷ்மியை வணங்கி வந்தால் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும். வறுமை தீரும்.

சனி

பெருமாளை தரிசிக்க சனிக்கிழமை உகந்த நாளாகும். சனிபகவான் விஷ்ணுவின் பக்தன் என்பதால் சனிக்கிழமைகளில் விஷ்ணுவின் கீர்த்தனைகளை பாடி வந்தால் சனிபகவான் மனம்நெகிழ்ந்து நமக்கு நன்மை செய்வார். இந்நாளில் காளியம்மன் கோவில் மற்றும் அனுமன் கோவிலுக்கு செல்வது நன்மையை உண்டாக்கும்.

Recent Post

RELATED POST