ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு, நல்ல சத்தான உணவு, நல்ல தூக்கம் என்பது அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.
ஆனால், மாறி வரும் வாழ்க்கை முறையின் காரணமாக, பல்வேறு மக்களுக்கு, தூக்கமின்மை என்ற பிரச்சனை இருந்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு சில வழிகள் உள்ளது. அவை என்னவென்று, பின்வருமாறு பார்க்கலாம்.
1. தினமும் ஒரே மாதிரியான நேரத்தில் தூங்கும் பழக்கத்தை கொள்ள வேண்டும். அதாவது, நம் மூளையை ஒரே நேரத்தில் தூங்கி, நாம் பழக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், அந்த நேரம் வரும்போது, நமக்கு தானாகவே தூக்கம் வந்துவிடும்.
2. பகலில் தூங்குவதை நிறுத்த வேண்டும். பகலில் தூங்க வேண்டும் என்று தோன்றினால், 30 நிமிடங்களுக்கு தூங்கிக் கொள்ளலாம். ஆனால், அந்த தூக்கமும் மாலை 4 மணிக்கு மேல் தூங்கக் கூடாது.
3. மது, புகையிலை ஆகிய கெட்ட பழக்கங்களை நிறுத்த வேண்டும். இதேபோல், டீ, காபி குடிப்பதை முடிந்த வரை குறைக்க வேண்டும். உடல் சுறுசுறுப்பாக இருப்பதற்கு, காலையில் வேண்டுமானால் குடித்துக் கொள்ளலாம். ஆனால், மதியம் 2 மணிக்கு மேல், டீ, காபி குடிக்கவே கூடாது.
4. தூங்குவதற்கு முன்பு, அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது, மிகவும் குறைவாகவும் சாப்பிடக் கூடாது. மேலும், சாப்பிட்டு முடித்த 2 மணி நேரத்திற்கு பிறகு, தூங்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
5. உடற்பயிற்சி செய்வதால், நமக்கு தூக்கம் நன்றாக வரும். ஆனால், நாம் மாலையில் உடற்பயிற்சி செய்வதாக இருந்தால், மாலை 5 மணிக்கே, செய்ய உடற்பயிற்சிகளை முடித்துவிடுவது நல்லது. அதாவது, தூங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாகவே உடற்பயிற்சிகளை முடித்திருக்க வேண்டும்.
6. தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக, டிவி அல்லது மொபைல் பயன்படுத்தக் கூடாது.
7. தினமும் ஒரு அட்டவணை தயார் செய்து, அதற்கேற்றப்படி பின்பற்றினால், தூங்கும் வருவதில் பிரச்சனை ஏற்படாது. அதாவது, தினமும், இரவு 8.30-க்கு சாப்பிடணும், 9 மணிக்கு கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணணும், பிறகு 10.30 அல்லது 11-க்கு தூங்க வேண்டும் என்று அட்டவணை வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அட்டவணையை, உங்கள் சௌகரியத்திற்கு ஏற்றப்படி எப்படி வேண்டுமானாலும் தயார் செய்துக் கொள்ளலாம்.
8. உங்கள் படுக்கை அறையில், தூங்குவது தொடர்பான பொருட்கள் மட்டுமே இருக்க வேண்டும். உங்களது கவனத்தை திசை திருப்பக் கூடிய எந்தவொரு பொருளும், படுக்கை அறையில் இருக்கக் கூடாது.
9. தூங்கும் சூழ்நிலையை நல்ல முறையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது, வீட்டின் படுக்கை அறையை இருட்டாக வைத்துக் கொள்ளுதல், செல்போன்களை தூரமாக வைத்தல், சத்தம் எதுவும் இல்லாமல், அமைதியான முறையில் படுக்கை அறையை வைத்துக் கொள்ளுதல் என்று சூழ்நிலையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
10. தூக்கம் வரவில்லை என்றால், உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம், தூக்கம் வருவதற்கு இன்னும் தாமதம் தான் ஆகும். உங்களை நீங்களே வற்புறுத்திக் கொண்டால், தூக்கம் வருவதற்கு தாமதம் தான் ஆகும்.
ஒன்றிரண்டு மாதங்களாக தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் மட்டும் தான், இந்த 10 வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மற்றபடி, உடலில் உள்ள நோய்களின் காரணமாக, தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களே, மனப் பிரச்சனை காரணமாக தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களோ, அதுதொடர்பான மருத்துவரை அணுகுவதே சிறந்தது ஆகும்.