ஊர்: காவளம்பாடி
மாவட்டம்: நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு.
மூலவர் : கோபாலகிருஷ்ணன்
தாயார் : செங்கமல நாச்சியார்
தீர்த்தம்: தடமலர்ப்பொய்கை தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி
திறக்கும் நேரம்: காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
தல வரலாறு
கிருஷ்ணர் பாமாவுடன் தங்குவதற்கு துவாரகை போல ஒரு நந்தவனம் தேடினார். அப்படி ஒரு இடம்தான் காவளம்பாடி. இந்த இடத்தை, வட துவாரகைக்கு இணையாக தலபுராணம் சொல்கிறது. இன்றைக்கும் இவ்வூர் பசுமையாக உள்ளது. தேவலோக மலரான பாரிஜாத பூச்செடி இத்தலத்தில் கிருஷ்ணரால் நடப்பட்டது என சொல்லப்படுகிறது. கோயில் சிறியதாக இருந்தாலும் மிக அழகாக உள்ளது.
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 27 வது திவ்ய தேசம். குழந்தையின்மைக்கு இங்கு வேண்டி, பிரார்த்தனை செய்து நிறைவேறியதும் கிருஷ்ணருக்கு வெண்ணெய் சாத்தி பாயாசம் செய்து நிவேதனம் செய்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறுநாள் இங்கு சுற்றியுள்ள 11 திருப்பதி பெருமாள்களும் ஒன்றாக கருட சேவையில் காட்சி கொடுக்கிறார்கள். இவர்களை மங்களாசாசனம் செய்வதற்கு திருமங்கையாழ்வாரும் எழுந்தருள்கிறார். இந்த காட்சியை காண திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கூடுகிறார்கள்.