தினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பச்சை மிளகாய் என்றவுடன் அதிலுள்ள காரம் தான் நினைவுக்கு வரும். அதில் இருக்கக்கூடிய சத்துக்கள், நன்மைகள் என்ன என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

காரம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக சிலர் இதனை ஒதுக்குவதும் உண்டு. பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இந்திய உணவு பழக்க வழக்கங்களில் காரம் அதிகமாகவே உபயோக செய்கின்றோம். குழம்பு, கறி, பொரியல், கூட்டு என்ற அனைத்து விஷயங்களிலும் பச்சை மிளகாய் சேர்ப்பதையே நாம் வழக்கமாக வைத்துள்ளோம்.

Advertisement

பச்சை மிளகாயில் கலோரிகள் மிகக் குறைவு. இது உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். பச்சை மிளகாயில் உள்ள பீட்டா கரோட்டின் இதய செயல்பாட்டை முறையாக பராமரிக்க உதவுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அளவையும் குறைக்கிறது. இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.

பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் உள்ளதால் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முடி உதிர்வை குறைக்க வழி செய்கிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சமநிலையில் இருக்கும்.

வயிற்றுப் புண், தொண்டை புண், அல்சர் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் பச்சைமிளகாயை தவிர்ப்பது நல்லது.

பச்சை மிளகாயை நேரடியாக உட்கொள்ள முடியாது. நாம் சாப்பிடும் உணவுகளில் சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பச்சை மிளகாயை அதிகம் சேர்த்துக் கொண்டால் சிலருக்கு அடிவயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு உருவாகலாம். எனவே இதை அளவோடு பயன்படுத்த வேண்டும்.

இது போன்று மருத்துவம் மற்றும் காய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.