நாவின் சுவை மொட்டுகளைத் தூண்டும் தன்மை இந்த மாங்காய்க்கு உண்டு. மாங்காயில் உப்பு தடவி கொடுத்தால் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், மாங்காயை ஜூஸாக எடுத்துக் கொண்டால், அது உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது.
மாங்காயில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க விரும்பும்வர்கள், தங்களுடைய சாலட்களில் பச்சை மாங்காயை சேர்க்கலாம்.
பச்சை மாங்காயின் கலோரி அளவுகள் மாம்பழத்தை விட மிகவும் குறைவாக உள்ளன, மேலும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.
கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக, பச்சை மாங்காயில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றன.
மாங்காயில் உள்ள நார்ச்சத்துக்கள், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகின்றன.
மாங்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், இது தலைமுடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.