உடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் பச்சை பட்டாணியும் உண்டு. பச்சை பட்டாணி குருமா, வெஜிடபிள் பிரியாணி போன்ற உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்கள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

பச்சை பட்டாணி இனிப்பும் மாவுச்சத்தும் கொண்டது. இது பீன்ஸ் வகையை சேர்ந்தது. உடலுக்குத் தேவையான வைட்டமின் கே, வைட்டமின் சி, புரதச்சத்து ஆகியவை இதில் உள்ளது. 100 கிராம் பட்டாணியில் 81 கலோரிகளை மட்டுமே கொண்டிருக்கிறது. பச்சை பட்டாணியில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.

பட்டாணி மற்றும் பயறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வயிற்று புற்றுநோய் அபாயம் 50% குறைவதாக 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பட்டாணியில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 அமிலங்கள் ஆக்சிஜனேற்றம் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. பட்டாணியில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை குறைகிறது.

பட்டாணியில் கரோட்டினாய்டு நிறமி லுடின் ஜீயாக்சாண்டின் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் இது ஆரோக்கியமான கண்பார்வைக்கு உதவுகிறது.

பச்சை பட்டாணியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் இ ஆகியவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. பட்டாணியில் கலோரிகள் குறைவாகவும் புரதம் அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது.

பச்சைப்பட்டாணியில் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் ஆன்டி இன்ப்ளமேட்டரி ஊட்டச்சத்துக்கள் மூட்டு வலியை தவிர்க்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் கே ஆனது எலும்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் எலும்பு சம்பந்தமான நோய்கள் வருவதும் தடுக்கப்படுகிறது.

பச்சைப்பட்டாணியில் உள்ள ப்ளேவனாய்டுகள், பைட்டோ நியூட்ரியண்ட்கள், கரோட்டினாய்டுகள் மற்றும் ஃபீனாலிக் அமிலம் உடலை இளமையாக வைத்திருக்க செய்கிறது. கொலாஜன் நிறைவாக இருந்தால் சருமம் உறுதியாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க செய்கிறது.

Recent Post

RELATED POST