நாம் கடைகளில் வாங்கும் சாதாரண உருளைக்கிழங்கில் குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் பச்சை நிறமாக இருக்கும். அப்படி இருந்தால் பச்சை நிற பாகங்களை மட்டும் வெட்டி விடுங்கள்.
உருளைக்கிழங்கில் சோலனைன் என்கிற நச்சு கலவை இருப்பதால் தான் பச்சை நிறம் தெரிகிறது. இந்த நிறமியானது உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்றாலும் அதை வெட்டி எறிவதே நல்லது. ஏனென்றால் இந்த கிழங்குகள் சூரிய வெளிச்சத்திற்கு கொண்டு வரும்போது இதில் அதிக அளவு சோலனைன் உற்பத்தி ஆக கூடும்.
சோலனைன் அதிகமாக உள்ள உருளைக்கிழங்கை சாப்பிட்டால் குமட்டல், தலைவலி, காய்ச்சல், வயிற்றில் வலி ஆகியவை ஏற்படும்.
அனைத்து உருளைக்கிழங்கிலும் இந்த நச்சானது இயற்கையாகவே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே பச்சை நிறம் ஏறிய உருளைக்கிழங்குகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நீக்கிவிட்டு உண்பது நல்லது.