க்ரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும் என்ன?

க்ரீன் டீ உலகம் முழுவதும் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. சாதாரணமாக டீ, காபி குடிப்பதை விட க்ரீன் டீ குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும்.

உலக அளவில் ஜப்பானியர்கள் தான் கிரீன் டீ அதிகம் அருந்துகின்றனர். இதனால்தான் அவர்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

கிரீன் டீ-யில் உள்ள பாலிபீனால் என்ற சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இது புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது. க்ரீன் டீ தூளை பயன்படுத்துவதற்கு பதிலாக கிரீன் டீ இலைகளை பயன்படுத்துவது சிறந்தது.

ஒரு நாளைக்கு மூன்று முறை கிரீன் டீ அருந்துபவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் ஆபத்து குறைவதாக ஜப்பான் மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிரீன் டீ குடிப்பதினால் நரம்பு மண்டலம் வலிமை பெறுவதோடு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கின்றது. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுத்து வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

கிரீன் டீ தீமைகள்

கிரீன் டீ அதிகம் குடிப்பதால் தலைவலி, சோம்பல் மற்றும் சோர்வு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும் அதிகப்படியான சிறுநீர் கழிப்பது நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும்.

நீண்ட காலம் தொடர்ந்து க்ரீன் டீ குடிப்பது இதய நோயாளிகளுக்கு நல்லதல்ல. இரத்த சோகை உள்ளவர்கள் க்ரீன் டீ குடிக்க கூடாது. முக்கியமாக வெறும் வயிற்றில் கண்டிப்பாக குடிக்கக்கூடாது.

மாதவிடாய் காலத்தில் கிரீன் டீ சில பெண்களுக்கு ஒவ்வாமையை உருவாக்கும். எனவே அந்த மாதிரியான சமயங்களில் கிரீன் டீயை தவிர்ப்பது நல்லது.

Recent Post

RELATED POST