கொய்யாப்பழத்தின் சத்துக்களும், ஆபத்துக்களும் என்ன?

“ஏழைகளின் ஆப்பிள்” என கொய்யாப் பழத்தினை அழைப்பார்கள், காரணம் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய வைட்டமின் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன.

ஆப்பிளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், கொய்யாப்பழத்திற்கு நாம் அளிப்பதில்லை. கொய்யாப்பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையே இருக்கிறது.

மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் இந்த கொய்யாப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகளுக்கு கொய்யாப்பழம் நல்ல மருந்தாக பயன்படுகிறது.

கொய்யா இலையைக் கஷாயம் வைத்து புண்களைக் கழுவி வந்தால் அவை விரைவில் ஆறும். கொய்யா இலையை மென்று தின்று, வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்.

கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

கொய்யா இலையை உலர வைத்து பொடியாக்கி பல் துலக்கினால் பற்கள் நன்கு சுத்தம் ஆவதோடு, வாய்துர்நாற்றம் நீக்குகிறது. மேலும் ஈறுகளில் உள்ள வலி, வீக்கத்தை குணப்படுத்துகிறது.

தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.

கொட்டை இருக்கும் சிவப்பு கொய்யாப்பழத்தை நறுக்கி வெயிலில் காயவைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கொய்யா மரத்தின்  இலை சாறுடன் அந்த பொடியை கலந்து தலையில் தடவி வந்தால் முடி பளபளப்பாக கருமையாக  வளரும்.

கொய்யாப்பழத்தை அரைத்து முகத்தில் பூச வேண்டும். காய்ந்த பிறகு நீரில் கழுவி வந்தால் சில மாதங்களில் உங்களுக்கு சிவப்பழகு கிடைக்கும்.

கொய்யா இலையை பேஸ்ட் போல் அரைத்து முகப்பரு உள்ள இடத்தில தடவினால் பரு இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.

வைட்டமின் ‘சி’

கொய்யாப்பழத்தில் வைட்டமின் டி மற்றும் சி, கால்சியம் உயிர் சத்துக்கள் அடங்கியுள்ளது. வைட்டமின் ‘சி’ உடலில் நோய் எதிர்ப்புத் சக்தியை அதிரிப்பதுடன் நோய்க்கிருமிகளின் தொற்றிலிருந்து நமது உடலை பாதுகாக்கிறது.

சர்க்கரை அளவை குறைக்கிறது

கொய்யாப் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகையால், நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும். மேலும், கொய்யாவில் லைக்கோபீனே அதிகமுள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்களை இது அழித்துவிடுகிறது.

கர்ப்பிணிக்கும், கருவுக்கும்

கொய்யாவில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகமாக இருப்பதால் இது கர்ப்பிணிகளுக்கும், கருவில் வளரும் கருவுக்கும் கண் குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும், குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்த்து நரம்பியல் கோளாறுகளிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.

மது அடிமைகளை மீட்கும்

மது போதைக்கு மிகவும் அடிமையான மது பிரியர்கள் அந்தபழக்கத்திலிருந்து விடுதலை பெற நினைப்போர் கொய்யப்பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் எண்ணம் தூள் தூளாகி விடும். மதுவை விரைவில் நிறுத்தி விடலாம்.

கொய்யா பழத்தின் தீமைகள்

கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும். சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும்.

அளவுக்கு மீறினால் அமுதம் நஞ்சு, அதேபோல், கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். இல்லாவிடில் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

கொய்யாப்பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது தொண்டை வலிக்கு வழிவகுக்கும்.

சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

சாப்பிட்ட பின், அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன், கொய்யாப்பழத்தை சாப்பிட வேண்டும்.

Recent Post

RELATED POST