கூந்தலுக்கு ஹேர் டை பயன்படுத்துவது சரியா..?

கூந்தலுக்கு ஹேர் டை பயன்படுத்துவது சரியா..? தவறா..? என்பது குறித்தும், அவற்றை சரியான வழியில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், இந்த கட்டுரையில் விளக்கமாக பார்க்கலாம்.

நடுத்தர வயது பெண்கள்:

முந்தைய காலங்களில் ஆண்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ஹேர் டை, தற்போது அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, நடுத்தர வயதை சேர்ந்த பெண்களுக்கு, ஹேர் டை என்பது, முக்கிய அழங்காரப் பொருட்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்த ஹேர் டை குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருகிறது. முடி கொட்டிவிடும், எரிச்சல் உண்டாகும் போன்ற பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டு வருகிறது. இதில், உண்மையில்லை என்று தான் சொல்ல வேண்டும். ரசாயணங்கள் சில, ஹேர் டையில் கலந்திருந்தாலும், அதனை சரியான வழியில் பயன்படுத்தினால், ஆபத்து குறைவு தான்.

ஹேர் டையை எப்படி பயன்படுத்த வேண்டும்?

அனைத்து வகையான ஹேர் டைiயும், அனைத்து வகையான முடிகளுக்கும் ஏற்றது கிடையாது. எனவே, ஹேர் டையை பயன்படுத்துவதாக இருந்தால், சிறிதளவு மட்டும் கூந்தலில் போட்டுவிட்டு, பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுகிறதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பிறகு, உபயோகிக்க வேண்டும்..?

ஒரு சிலர் ஒவ்வொரு மாதமும், ஹேர் டையை பயன்படுத்தி, முடியில் அதிக அளவு ரசாயணங்கள் தேங்குவதற்கு வழிவகுப்பார்கள். ஆனால், அது முற்றிலும் தவறு. 3 மாதங்களுக்கு ஒரு முறை தான் ஹேர் டையை பயன்படுத்த வேண்டும்.

தலைமுடியின் கருமையான நிறத்திற்காக தான் ஹேர் டையை பயன்படுத்துகிறோம். ஆனால், ஹேர் டையை சரியாக பயன்படுத்தவில்லையென்றால், ஒவ்வொரு மாதமும், ஹேர் டை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, கருப்பு நிறம் சீக்கிரம் மங்கி விடாமல் இருக்க சில வழிமுறைகளை ஹேர் டை பாக்கெட்டுகளில் குறிப்பிட்டு இருப்பார்கள். நாம் அவற்றை சரியாக பின்பற்றினால் மாதமாதம் ஹேர் டை போடுவதை தவிர்க்கலாம்.

இப்பொழுது நாட்டு மருந்து கடைகளில் மூலிகை ஹேர் டைகளும் விற்பனை ஆகின்றது. ரசாயன ஹேர் டை உபயோகிக்க விரும்பாதவர்கள் இது போன்ற மூலிகை ஹேர் டைகளை பயன்படுத்தலாம்.

நாம் என்ன தான் ஹேர் டை பயன்படுத்தி வயதை குறைத்துக் கொள்ள நினைத்தாலும், இயற்கை அழகு தான் என்றுமே சிறந்தது. சில தவிர்க்க முடியாத சூழலில் மட்டும், ஹேர் டையை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

Recent Post

RELATED POST