கலப்பை நிலத்தை உழுது பண்படுத்துவதுபோல் உடலிலுள்ள நரம்புகளை எல்லாம் பக்குவப்படுத்தி, இடுப்பில் உள்ள தேவையற்ற சதைகளை கரைக்கக் கூடிய தன்மை கொண்டதால் இந்த ஆசனம் ஹலாசனம் எனப் பெயர் பெற்றது.
ஹலாசனம் செய்முறை
தரைவிரிப்பில் மல்லாந்து படுத்து கொண்டு, இரு கைகளையும் உடலின் இரு பக்கங்களிலும் ஒட்டி நீட்டிக் கொள்ளவும்.
பின்னர் உள்ளங்கைகளை ஊன்றி, இரு கால்களையும் மடக்காமல் நேராக தூக்கி தலைக்கு பின்புறம் கொண்டு வந்து தரையைத் தொடச் செய்ய வேண்டும். இவைகளை சுவாசத்தை சீராக வெளியே விட்டுச் செய்ய வேண்டும்.
ஆசனத்தை மூன்று நான்கு வினாடிகள் நிறுத்தி பின்னர் கால்களை பின்னிழுத்து தளரவிட்டு உயர்த்தி பழைய நிலைக்கு கொண்டு வந்து சுவாசத்தை உள்ளிழுத்தபடியே கால்களை தரையில் வைத்து சுவாசத்தை சீராக வெளியேவிடவும். இதுவே ஹலாசனம் ஆகும்.
ஹலாசனத்தின் பலன்கள்
- நரம்புகள் வலுவடையும்
- அடிவயிற்று சதை கரையும்
- இடுப்பு வலிமை பெரும்
- வயிற்று உபதைகள் நீங்கும்
- மலிச்சிக்கலை நீக்கும்
- பிடரி வலியை நீக்கும்
- இரத்த ஓட்டம் சீராகும்