உயரம் தாண்டுவோர், நீளம் தாண்டுவோர் சாதனை புரிய ஹஸ்தபாடாசனம் உறுதுணையாய் இருக்கும்.
ஹஸ்தபாடாசனம் செய்முறை
தரைவிரிப்பில் நேராக நிமிர்ந்து நின்று கொண்டு வலது காலை இடுப்புக்கு நேராக நீட்ட வேண்டும். பின்னர் வலது கையால் வலது காலின் பெருவிரலைப் பிடிக்க வேண்டும்.
இடது கை இடது புறம் இடுப்பில் இருக்க வேண்டும். இந்த நிலையே ஹஸ்த்த பாதமுஸ்ட்டாசன நிலையாகும்.
வலது காலை கீழே கொண்டு வந்து பின் இடது காலை இடது காலின் பெருவிரலை பிடிக்க வேண்டும். வலது கை வலதுபுறம் இடுப்பில் இருக்க வேண்டும். இதேபோல் கால்களை மாற்றி மாற்றி ஐந்தாறு தடவை செய்யலாம்.
ஹஸ்தபாடாசனத்தின் பலன்கள்
- கால்களும், கைகளும் அசாதாரண பலம் பெறும்.
- இரத்த ஓட்டம் விருத்தியாகும்.
- மார்பு விசாலமடையும்.
- முதுகெலும்பு பலம் அடையும்.
- இடுப்பு வலிவு பெறும்.
- உடம்பு வில்லாய் வளைந்து நம் செயலுக்கு சொன்னபடி கேட்கும்.
மேலும், அனைத்து யோகாசனங்கள் மற்றும் அதன் பலன்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.