தலைவலி ஏன் வருகிறது? தீர்வு என்ன?

தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் இல்லாமை, குடிப்பழக்கம், புகைப்பழக்கம், மன அழுத்தம் போன்ற காரணங்களால் தலைவலி உருவாகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தலைவலி குணமாக என்ன செய்ய வேண்டும்?

அரை மணிநேரத்துக்கு ஒரு முறை கண்களுக்கு ஓய்வு தரவேண்டும். கண்களில் ஏற்படும் பிரச்னைகளால்தான் தலைவலி உருவாகிறது.

ஒரு சுத்தமான துணியில் முட்டைகோஸ் இலைகளை வைத்து தலையின் மீது ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவலி தீரும்.

எலுமிச்சை பழம் தோலை நன்றாக வெயிலில் காய வைத்து அரைத்து, நெற்றியில் பற்று போட்டால் நல்ல பலனை தரும்.

லவங்கப்பட்டை பொடியை தண்ணீரில் குழைத்து, நெற்றியில் பற்றுப் போட்டால், தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சந்தனத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல தயார் செய்து, நெற்றியில் பற்று போட்டால் தலைவலிதீரும். மேலும் இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

தேங்காய் எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்வதால் தலையில் ரத்த ஓட்டம் சீராகி, தலைவலி நீங்கி விடும்.

சூடான ஒரு கப் டீயில் இஞ்சி, மல்லி தட்டி போட்டு குடித்தால் தலைவலி பறந்துவிடும்.

துளசி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் சிறிது தேன் கலந்து குடித்தால், தலைவலி குணமாகும்.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவை தலைவலியை உருவாக்கும். ஆகையால் அவற்றை தவிர்ப்பது நல்லது.

வெயில் காலங்களில் அதிக நேரம் வெளியே சுற்றுவது, காரமான உணவுகளை சாப்பிடுவது, வயிறு முட்ட சாப்பிடுவது போன்றவற்றை தவிர்த்துக் கொள்வது நல்லது.

Recent Post

RELATED POST