கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும் மற்றும் பல நோய்களின் அபாயங்களில் இருந்தும் விடுபடலாம்.
கொய்யாப்பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளதால், அது வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை சரிசெய்கிறது. எனவே மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க, தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள்.
உடலில் வைட்டமின் ஏ குறைவாக இருந்தால் கண்களில் பிரச்சனை ஏற்படும். கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் கண் தொடர்பான பிரச்சனைகள் வரவிடாமல் தடுக்கும்.
கொய்யா பழத்தில் உள்ள மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நரம்புகள் மற்றும் தசைகளை ரிலாக்ஸ் அடைய உதவி புரிந்து, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.
கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி3 போன்றவை அதிகம் இருப்பதால் இது மூளைக்கு செல்லும் நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, நினைவாற்றலை மேம்படுத்துகின்றன.