அவசர அவசரமா உணவு சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் எல்லாம் வரும்..!!

நாம் சாப்பிடும் உணவுகளை சரியாக மென்று சாப்பிடாமல் அவசர அவசரமாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நிதானமாக சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

செரிமான பாதிப்பு

அவசர அவசரமாகச் சாப்பிடுவதால் உமிழ்நீருடன் உணவு சரியாகக் கலக்காது. இது வயிற்று வலி, வீக்கம், அஜீரணம், வாயு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கெட்ட கொலஸ்ட்ரால்

வேகமாக சாப்பிடுபவர்களின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இதனால், இதயம் தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கும். எனவே நிதானமாக சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

நீரிழிவு நோய்

வேகமாக சாப்பிடுவதால் உடல் எடை கூடும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக டைப்-2 சர்க்கரை நோய் வர வாய்ப்பும் உள்ளது.

எடை அதிகரிப்பு

அவசர அவசரமாக உணவு சாப்பிடுவதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். இப்படி சாப்பிடுவதால் உணவுகள் சரியாக ஜீரணம் ஆகாமல் வயிற்றில் அப்படியே தங்கிவிடும். இதன் காரணமாக, உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.

Recent Post

RELATED POST