மாரடைப்பு வரமால் தவிர்க்கனுமா, இதே ஈஸியான டிப்ஸ்!!

ஆணாதிக்க ஆண்களின் இதயம் மற்றும் மிகுந்த கோபம் கொள்பவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி அவர்களது இதயம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். இதனால் மாரடைப்பு ஏற்படக்கூடும் எனவே, அதனை இரக்க குணம் மற்றும் அன்பினால் குணப்படுத்த முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாரடைப்பு :

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு,மூக்கிற்கு மேல் கோபம் போன்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி கேட்டிருப்போம்.கோபம் உறவுகளை அழிப்பதை விட, உங்களையே அழித்து விடும் என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்? ஆம், அளவுக்கு அதிகமான கோபத்தினால் மாரடைப்பு ஏற்பட்டு மரணிக்க நேரிடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காகத்தான், இதய நோய் உள்ளவர்களிடம் அதிகப்படியான மகிழ்ச்சியை தரும் விஷயத்தையும் அல்லது கோபமூட்டும் விஷயத்தையும் கூற வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கோபம்

நீங்கள் விமர்சிக்கப்படும்பொழுதும்,பிறர் முன் நாம் தாழ்ந்து போகும்போது அதன் எதிர்வினையாக வெளிப்படும் உணர்ச்சியின் பெயர் தான் கோபம். கோபம் ஏற்படுவதால் நாம் நம் சிந்தனை இழந்து, பிறகு அனைத்தையும் இழக்க நேரிடும்.

கோபம், இதய ரத்த நாளங்களை கடினமாக்கி அடைப்புகள் ஏற்பட்டு இறுதியில் மாரடைப்பு உண்டாக்க வழிவகுக்கும். கோபத்தால் இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்கள் உருவாகும். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் மாரடைப்பு ஏற்ப்பட அதிக வாய்ப்பு உண்டு.

மாரடைப்பை ஏற்படுத்தும் கோபத்தை கட்டுப்படுத்தும் வழிகள் :

  • வெறுப்பை கைவிடுங்கள்.
  • அவசரம், பதற்றத்துடன் எந்த ஒரு காரியங்களும் ஈடுபட வேண்டாம்.
  • நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.
  • கோபம் வருகிற சூழ்நிலைகளில் பேசுவதை தவிர்த்திடுங்கள்.
  • ஆழமான பெருமூச்சு விடுங்கள்.
  • வாக்கிங் மற்றும் யோகா,விளையாட்டுகளில் கவனம் செலுத்துங்கள்.
  • கோபத்தை ஏற்படுத்தம் விஷயங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது.
  • இதயத்தை பலமாக்க நல்ல ஓய்வு தேவை.
  • ஏதாவது தாங்கள் விரும்பும் ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
  • மேலும் அனைவரிடமும் அன்பாக பேசுங்கள், பொறுமையாய் இருந்து மாரடைப்பை தவிருங்கள்.

Recent Post

RELATED POST