வியர்க்குரு மறைய வீட்டு வைத்தியம்

வியர்க்குரு ஏன் ஏற்படுகிறது?

வியர்வை சுரப்பி நாளங்கள் அடைபடுவதால், உள்ளே இருக்கும் வியர்வை சருமத்திற்குள் வீக்கத்தை உருவாக்குகிறது. இதனால் தோல் மீது சிறிய அளவில் தடித்து காணப்படும். இந்த வீக்கம் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும். வெயிலில் அதிகமாக செல்வதால் இது உருவாகிறது. இதைத்தான் வியர்க்குரு என்கிறோம்.

வீட்டு வைத்தியம்

சந்தனப் பவுடருடன் ரோஸ் வாட்டர் கலந்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வியர்க்குரு முழுவதும் நீங்கிவிடும்.

சந்தனப்பவுடர், வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து, வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வியர்க்குரு அதிகமாக இருந்தால் குளிக்கும் போது சோப்பு பயன்படுத்தாமல் கடலை மாவு அல்லது பயத்தம் மாவு போட்டு குளிக்கலாம்.

வியர்க்குரு உள்ள இடத்தில் தயிரை தடவி காய்ந்த பிறகு கழுவி வந்தால் வியர்க்குரு மறையும்.

மோர், இளநீர், நுங்கு ஆகியவற்றை அருந்துவது நல்லது. இதனால் உடல் சூடு குறைந்து வேர்க்குரு மறையும். லெமன் ஜூஸ் குடித்து வந்தால் வியர்க்குரு குறைந்து விடும். மேலும் வராமல் தடுக்கும்.

வேப்பிலை – ஒரு கப், சந்தனம் – 2, மஞ்சள் – அரை கப், அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு, ரோஸ் வாட்டர் அரை டீஸ்பூன் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இது மிகவும் விரைவில் பயனளிக்கக் கூடியதாகும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்லது.

கற்றாலையில் உள்ள ஜெல்லை எடுத்து அதை வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்வதால் வியர்க்குருவினால் ஏற்படும் அரிப்பு குறையும். மேலும் சோற்றுக்கற்றாழைச் சாறு குடிப்பது வியர்க்குரு வராமல் தடுக்கும்.

வெள்ளரிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதை 15 நிமிடம் வேர்க்குரு உள்ள இடத்தில் தடவி வந்தால் இரண்டே நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சாதம் வடித்த தண்ணீர் வியர்க்குருவுக்கு நல்ல மருந்து. சாதம் வடித்த தண்ணீரை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் வியர்க்குரு மறையும்.

Recent Post

RELATED POST