நீண்ட நேரம் ஹீல்ஸ் அணிவதால் ஏற்படும் தீமைகள்..!

பெண்கள் ஹீல்ஸ் அணிவது தனித்துவமான ஸ்டைலாக இருந்தாலும், இதனால் கால்கள் மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள எலும்புகள் கடும் பாதிப்புக்கு ஆளாவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

முதுகு மற்றும் கால்களில் பிரச்சனைகள் உள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் ஹீல்ஸ் அணிவது நல்லதல்ல என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தட்டையான செருப்புகளை அணிவதால் நமது முதுகு தண்டு உடல் எடையை சமநிலைப்படுத்தும். ஆனால் ஹீல்ஸ் செருப்புகளை அணியும் போது குதிக்கால் பகுதி சற்றே உயரமாக இருப்பதால் முதுகு எலும்பின் சமநிலையை பாதிக்கும். இதனால் கீழ் முதுகுப்பகுதியில் அதிக வலி ஏற்படும்.

ஹீல்ஸ் அணியும்போது உடலின் முழு எடையையும் கணுக்கால் தாங்க வேண்டியிருக்கும். இதனால் கணுக்காலில் கடும் வலியை ஏற்படுத்தும்.

ஹை ஹீல்ஸ் அணிவது கணுக்காலில் உள்ள நரம்புகள் சேதமடைய வழிவகுக்கிறது. இதனால் சாதாரணமாக காலை கீழே உன்றினாலே கடும் வலி ஏற்படக்கூடும்.

குதிக்கால் மற்றும் விரல்களுக்கு இடையே ஏற்படும் அழுத்தமானது சுளுக்கு போன்ற பிரச்சனைகளை உருவாக்கூடும். எனவே அதிக நேரம் ஹைஹீல்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது.

Recent Post

RELATED POST