2019ம் ஆண்டில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது HMPV என்ற புதிய வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தற்போது இந்தியாவில் நுழைந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் 8 மாத குழந்தைக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
HMPV அல்லது மனித மெட்டாப்நியூமோவைரஸ் என்பது ஒரு சுவாச மண்டலத்தை பாதிக்கும் வைரஸ் ஆகும். இது முதன்முதலாக 2001 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் மனிதர்களின் உடலில் நுழைந்ததும் முதலில் சுவாச மண்டலத்தை பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த வைரஸ் குழந்தைகள், முதியவர்கள், பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம் கொண்டவர்களை விரைவில் தாக்கும். இந்த HMPV வைரஸ் கோவிட்-19 போன்று விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகல், உடல் சோர்வு, உடல் வலிகள், மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுத்திணறல் ஆகியவை இந்த வைரஸின் அறிகுறிகள் ஆகும்.