வயிற்றில் கோளாறுகள், புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு போன்ற பல காரணங்களலால் வாயில் தூர்நாற்றம் ஏற்படுகிறது. அதனை சரி செய்ய இயற்கை மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம்.
பொதுவான சில வழிமுறைகள்
பொதுவாக உணவு பொருட்கள் எது சாப்பிட்டாலும், வாய் கொப்புளித்தாலே பெரும்பாலோனோருக்கு சரியாகிவிடும்.
தினமும் ஒரு குறிப்பிட்ட இடைவேளியில் தேவையான அளவு தண்ணீர் குடித்து வந்தால், வாயில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களும் உணவுத் துகள்களும் சுத்தமாகிவிடும். இதுவே வாய் நாற்றத்திற்கு முதல் காரணமாக இருக்கின்றன.
தினமும் இரண்டு முறை காலை மற்றும் இரவு தூங்கும்முன் பல் துலக்குவது பல் இடுக்குகளில் தங்கியிருக்கும் உணவுகளையும், அழுக்குகளையும் பொருள்களை சுத்தப்படுத்த உதவும். இதனால் நாற்றம் ஏற்ப்படாது.
வாய் நாற்றத்தை போக்கும் மருத்துவ வழிகள்
உடனடி நிவாரணத்திற்கு சூயிங்கம், Mouth Freshnner போன்றவற்றை பயன்படுத்தலாம்.
கிராம்பு அல்லது சீரகம் மென்று வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம்
எலுமிச்சை சாறுடன் நீர், சிறிது உப்பு கலந்து குடித்து வரலாம். இதில், வாய்கொப்புளித்தாலும் நாற்றம் நீங்கும்.
குடலில் ஏற்படும் பிரச்சனையால்தான் வாயில் நாற்றம் ஏற்படுகிறது. அதற்கு, தினமும் காலையில் 4 டம்ளர் தண்ணீர் வெறும் வயிற்றில் குடித்து வர வயிறு சுத்தப்படும், அல்சரும் நீங்கும், வாய் நாற்றமும் மாறும்.
கொத்தமல்லி கீரையை வாயில் போட்டு மென்றால் வாய் நாற்றம் மாறும்.
சிறிது லவங்க பட்டையை நீரில் காய்ச்சி மிதமான சூட்டில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
பலா இலையை பொடியாக நறுக்கி அதனை தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி பின் அதோடு பனங்கற்கண்டை சேர்த்து தினமும் காலையில் எடுத்துக் கொண்டால் வாய் புண் ஆறும். வாய் துர்நாற்றமும் நீங்கும்.
மேலே குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் வாய் துர்நாற்றம் போகவில்லை என்றால், பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.