அஜீரண கோளாறு சரி செய்வது எப்படி?

அஜீரணத்தின் அறிகுறிகள்.

நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், குமட்டல், வாந்தி, வயிற்று உப்புசம், வயிற்றில் இரைச்சல். பசிக் குறைவு, அடிக்கடி வாயு பிரிதல், மலச்சிக்கல், வாயில் அதிகமாக உமிழ்நீர் சுரத்தல், வாய்நாற்றம் போன்றவை

அஜீரணத்தை தவிர்க்கும் பொதுவான வழிகள்

மோர், இளநீர், பழச்சாறுகள், காய்கறி சூப், நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்யுங்கள். குறைந்தது நடைப் பயிற்சியாவது செய்வது அவசியம்.

அஜீரணத்தை குணமாக்கும் இயற்கை மருத்துவம்

1. ஒரு கப் சாதம் வடித்த நீரை எடுத்து அதில் கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க அஜீரணம் குணமாகும்.

2. இஞ்சியை தோல் நீக்கி அரைத்து சாறு எடுத்து அதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குடித்தால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

3. ஒரு டம்ளர் தண்ணீர், இஞ்சி, சீரகம், கருவேப்பிலை மூன்றையும் இட்டு நன்றாக கொதிக்க வைத்து, பின் வடிகட்டி அந்த நீரை பருகினால் அஜீரணம் நீங்கும்

4. உணவுக்கு பின் வெற்றிலை எடுத்துக் கொள்ளலாம். வெற்றிலையுடன் (பாக்கு சுண்ணாம்பு தவிர்த்து) நான்கு மிளகு சேர்த்து மென்று தின்றால் அஜீரணம் சரியாகும்.

5. சுக்கு, சாதிக்காய், சீரகம் போன்றவைகளை தலா 100கிராம் எடுத்து அதனை நன்றாக பொடி செய்து சாப்பாட்டுக்கு முன் 2 கிராம் அளவிற்கு எடுத்துக் கொண்டால் அஜீரணம் குணமாகும்.

6. நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் வலுவடையும் மற்றும் அஜீரண கோளாறு வராது.

7. ஒரு டம்ளர் மோரில் வறுத்த மல்லியை பொடியாக்கி அதனை கலந்து குடித்தால், அஜீரண கோளாறு நீங்கும்.

8. சாப்பிட்ட பின், ஒரு சின்ன தேக்கரண்டி அளவு சோம்பை வாயில் போட்டு மென்றால், உணவு நன்கு செரிமானம் ஆகும்.

9. ஒரு ஸபூன் அளவு ஒமத்தை எடுத்து, கையால் கசக்கி அதனை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடித்தால், அஜீரண கோளாறு நொடியில் பறந்துவிடும்.

10. சீரகத்தை வறுத்து பொடியாக்கி, ஒரு ஸபூன் அளவு சீரகப் பொடியை, ஒரு டம்ளர் நீரில் கலந்து பருகினால் உணவு நன்றாக செரிமானம் ஆகும்.

11. சாப்பாட்டுக்கு பின் க்ரீன் டீ குடித்தால், அஜீரண பிரச்சனைகளை தடுக்கலாம்.

12. புதினா இலையை சாறு எடுத்து அதனை ஒரு டம்ளர் நீரில் கலந்து பருகினால் நல்ல பலன் தரும்.

ஒரு சிறிய துண்டு இஞ்சியை உப்பில் தொட்டு, அதனை மெதுவாக வாயில் மென்று அதன் சாற்றினை விழுங்கினால், செரிமான சக்தி தூண்டப்பட்டு உணவு செரிமானமாகும்.

இது போன்று மருத்துவம் குறிப்புக்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Recent Post

RELATED POST