நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் சூப்பரான தேநீர்

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் வீட்டிலேயே தங்கி, நமது நோய் எதிர்ப்பு சக்தியைக் கவனித்துக்கொள்வது அவசியம். நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சமையலறையை விட சிறந்த இடம் எதுவுமில்லை. வீட்டு வைத்தியம் மற்றும் எளிய உணவுகளின் மூலம் நமது ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.

அந்த வகையில் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒரு எளிய இலவங்கப்பட்டை- தேன் தேநீர் எப்படி செய்வது? அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை இதில் பாப்போம்.

இலவங்கப்பட்டை மற்றும் தேன் இரண்டு சக்திவாய்ந்த பொருட்கள், அவை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், குளிர் மற்றும் காய்ச்சலுடன் போராடவும் இது பயன்படுகிறது.

தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் என்சைம்கள் உள்ளன. இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது.

தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் என்சைம்கள் உள்ளன. இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது.

இலவங்கப்பட்டை மற்றும் தேன் ஒவ்வாமைக்கு எதிராக போராடும். உடலில் உள்ள காயங்களை குணப்படுத்த ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 1/4 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். நல்ல ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நீங்கள் இதனை தினமும் குடிக்கலாம்.

Recent Post