வெந்நீரில் குளிக்கும் ஆண்களுக்கு! ஆண்மை பிரச்சினைகள் எல்லாம் வருமாம்

வெந்நீரில் குளித்தால் சோம்பல் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும் என சிலர் நம்புகிறார்கள். இன்னும் சிலர் வெந்நீரில் சிறிதளவு யூகலிப்டஸ் எண்ணெய் கலந்து குளித்தால் உடல்வலி நீங்குவதுடன் சளி இருமல் பிரச்னைகள் இருந்தால் சரியாகும் என்று நம்புகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல.

சுடுதண்ணீரில் குளிப்பதால் உடலுக்கு நன்மை செய்வதை விட தீமைகளையே அதிகம் செய்கின்றன.

ஆண்கள் சுடுதண்ணீரில் அரை மணிக்கு மேலாக குளித்துக் கொண்டிருந்தால் அது அவர்களின் ஆண்மைக்கே பிரச்சனை வரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சுடு தண்ணீர் நிரம்பிய பாத் டப்பில் அவர்கள் வெகுநேரம் குளிக்கவே கூடாது.

சருமம் மென்மையாக ஆரோக்கியமாக இருக்க அடிக்கடி சுடு தண்ணீரில் குளிப்பதை தவிர்க்கவும். வெந்நீரில் குளிக்கும் போது சருமத்தின் ஈரத்தன்மை குறைந்துவிடும். சருமத்தில் அரிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படும்.

சுடுதண்ணீரில் குளிப்பதால் தலைமுடியின் வேர்கள் பலமிழந்து அதிக அளவில் முடி கொட்டும். இதனால் ஆண்களுக்குத் தலையில் வழுக்கை விழுந்துவிடும்.

Recent Post

RELATED POST