புகை பிடிப்பதால் ஒரு ஆண்டுக்கு இத்தனை கோடி பேர் உயிரிழக்கிறார்களா??

புகையிலைப் பழக்கமே, பல்வேறு நோய் பரவ முக்கிய காரணியாகவும், அதிகமான இறப்புக்கு காரணமாகவும் விளங்குகிறது. புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் உடலின் ஆரோக்கியத்திற்கு கேடுதான் அதிகமாகும்.

புகை பிடிக்கும் பழக்கத்தால் உலகில் ஆண்டுதோறும் 2 கோடி பேர் உயிரிழப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

புகழ்பெற்ற லான்செட் மருத்துவ இதழில் ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் புகை பழக்கம், மது அருந்துதல், உடல் பருமன், ஹெச்பிவி வைரஸ் தொற்று ஆகிய 4 காரணங்களால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கானோர் இறப்பதாக கூறப்பட்டுள்ளது.

Also Read : சிகரெட் பிடிப்பவரின் அருகில் நிற்பதால் இவ்வளவு ஆபத்தா?

இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய 7 நாடுகளில் புகை பிடிப்பதால் புற்றுநோய் ஏற்பட்டு ஆண்டுதோறும் 13 லட்சம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் மற்ற நாடுகளில் ஏற்படும் இறப்புகளை காட்டிலும், இது அதிகம் என அந்த ஆய்வு கூறுகிறது.

Recent Post

RELATED POST